“ஜாதி” இல்லாத ஜல்லிக்கட்டு.. யாருக்கும் முதல் மரியாதை இல்லை! “ரோல் மாடலான” மதுரை அவனியாபுரம்
சென்னை: தமிழர் திருநாளான தை பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஊர் தலைவர்களுக்கு வழங்கப்படும் முதல் மரியாதை ஏதும் இன்றி முழு அரசு கட்டுப்பாட்டுடன் சமுத்துவமான முறையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
2023 ஆம் ஆண்டின் பொங்கல் விழா இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அமைச்சர், எம்பி பங்கேற்பு
மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் தலைமையில் தொடங்கி இருக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழ்நாடு பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளார்கள்.

அரசியல் தலைவர்கள் வருகை
அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன், தளபதி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிர்தெளஸ் பாத்திமா, திருப்பரங்குன்றம் மதுரை வடக்கு, மதுரை தெற்கு மண்டல தலைவர்கள் சுவிதா விமல், சரவண புவனேஸ்வரி, முகேஷ் சர்மா முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு
மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் நரேந்திரன் நாயர் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், மதுரை சரக டிஐஜிஆகியோர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஜல்லிக்கட்டில் முதல் காளையாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து காளைகள் களமிறங்கி வருகின்றன திமிருகிட்டு வரும் காளைகளை ஜல்லிக்கட்டு காளையர்கள் அடக்கி வருகின்றனர்.

யாருக்கும் முதல் மரியாதை இல்லை?
வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டிகள், கோயில் திருவிழாக்கள் போன்ற கிராமங்களில் நடைபெறும் விழாக்களில் ஊர் தலைவர்கள், விழா குழுவினருக்குக்கு முதல் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். கிராமங்களில் ஊர் தலைவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் அப்பகுதியில் உயர் வகுப்பினராகவும், பெரும்பான்மை சாதியினராகவுமே இருப்பது வழக்கம்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதனால் தமிழர் விளையாட்டான ஜல்லிக்கட்டில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவில் பட்டியல் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முதல் மரியாதை இல்லை
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விழா குழுவினர் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டது. இதனால் இன்றைய போட்டியில் யாருக்கும் முன்னுரிமை கொடுத்து முதல் மரியாதை வழங்கப்படாததால் சமத்துவமான முறையில் ஜல்லிக்கட்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications