Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1..2..3.. கேம் ஸ்டார்ட்.. நொறுங்கும் ஓபிஎஸ் கோட்டை.. 2 அம்புடன் எடப்பாடி பழனிசாமி.. இலை? தலை? பலே பலே

ஓபிஎஸ் எதிராக எடப்பாடி பழனிசாமி 2 விதமான வியூகங்களை கையில் எடுத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார்.. அவரது தற்போதைய பேச்சும்சரி, அவரது அரசியல் நகர்வும் சரி, திமுக + ஓபிஎஸ்ஸை குறி வைத்தே மீண்டும் நகர தொடங்கி உள்ளது.. இது இரு தரப்புக்குமே கடுப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிமுகவை பொறுத்தவரை, இப்போதைக்கு எடப்பாடி கையில் உள்ளது.. நீதிமன்ற தீர்ப்பும் எடப்பாடிக்கு சாதகமாகவே உள்ளது.

இவையெல்லாம் தற்காலிக சூழல் மட்டுமே.. அதாவது முழுமையான வெற்றி இல்லை.. ஆனால், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளது.

நுணுக்கம்

நுணுக்கம்

இனிவரும் அடுத்தடுத்த தீர்ப்புகள், உத்தரவுகள் எப்படி இருக்க போகின்றன? ஓபிஎஸ் எந்த மாதிரியான சட்டநுணுக்கங்களை சுப்ரீம்கோர்ட்டில் எடுத்து வைக்க போகிறார்? என்பதை பொறுத்துதான் அதிமுகவின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். ஒருவேளை இந்த முறையும் எடப்பாடிக்கு சாதகமான உத்தரவு நீதிமன்றம் மூலம் வந்தால், தேர்தல் ஆணையத்தில் நுழையவும் ஓபிஎஸ் தயங்க மாட்டார் என்கிறார்கள்..

 பிளஸ் பாயிண்ட் 2

பிளஸ் பாயிண்ட் 2

காரணம், அவர் இழப்பதற்கு கட்சிக்குள் வேறு எந்த பதவியும் இல்லை.. "இரட்டை இலை" மட்டுமே அவரது கடைசி ஆயுதமாக இருக்கும்.. அதை முடக்க நேர்ந்தால், அதிமுகவின் எதிர்காலமும் கேள்விக்குறிதான். ஆனால், இரட்டை இலை என்பது தொண்டர்களின் உணர்வுப்பூர்வமான ஒன்று.. அதனால் அவ்வளவு சீக்கிரம் யாராலும் முடக்கவும் முடியாது.. அப்படியே இருந்தாலும், தேர்தல் ஆணையம், சுப்ரீம்கோர்ட் போன்றவைகளின் இறுதிஉத்தரவுகள் கிடைப்பற்கு காலதாமதங்கள் ஏற்படும்..

 பிளஸ் பாயிண்ட் 2

பிளஸ் பாயிண்ட் 2

இதையெல்லாம் அறிந்துதான், எடப்பாடி துணிச்சலாகி உள்ளாராம்.. அதுமட்டுமல்ல, இரட்டை இலை விஷயத்திலும் சரியான காய்நகர்த்தலை முன்னெடுத்து வருகிறாராம். இப்போதுள்ள ஸ்பீடிலேயே சென்றால், இலை தன்னுடைய கையில் வந்துவிடும் என்று நினைக்கிறாராம்.. அப்படி தன் கைக்கு வராவிட்டாலும், ஓபிஎஸ் கைக்கு போகாமல், இலை முடங்கினால், அதுவும் ஒருவகையில் சாதகம் என்று கணக்கு போட்டுதான் களமிறங்கி உள்ளதாக சொல்கிறார்கள்.. இதற்கு நடுவில் திமுகவுடன் ஓபிஎஸ், ஓபிஆரை கோர்த்துவிட்டு பேசினால், அது தொண்டர்களிடம் வெறுப்பையும், அதிருப்தியையும் பெற்றுத்தரும் என்பதால், அந்த ரூட்டை மறுபடியும் கையில் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

 1..2..3.. திட்டங்கள்

1..2..3.. திட்டங்கள்

பிளஸ் பாயிண்ட்கள் நிறைய இருந்தாலும்கூட, 2 விஷயங்களில் மட்டும் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.. முதலாவதாக, தன்னுடைய ஆதரவாளர்களின் இப்போதுள்ள பலத்தை மேலும் பெருக்கி கொள்வது, அதாவது, ஓபிஎஸ் பக்கமுள்ள ஒருசில முக்கியமான புள்ளிகளையும் தன்பக்கம் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிறாராம். இதற்கு காரணமும் உள்ளது.. ஒருவேளை தேர்தல் ஆணையத்தில் இந்த விவகாரம் தலைதூக்கும்போது, தன் பலத்தை நிரூபிக்க அல்லது பலத்தை கணக்கிட, அதற்கு இப்போதே முழுவீச்சில் தயாராகிவிட வேண்டும் என்பதே எடப்பாடி டீமின் யோசனையாக உள்ளது..

 மேஜர் 2 குறிகள்

மேஜர் 2 குறிகள்

அதற்காக 2 சீனியர்களிடம் பேசப்பட்டு, அவர்களும் விரைவில் அணி மாறுகிறோம் என்று பாசிட்டிவ் தகவலை சொல்லி உள்ளார்களாம்.. இரண்டாவதாக, ஓபிஎஸ் தங்கள் தரப்பை விமர்சிக்கும் அளவுக்கு, இடம் தந்துவிடக்கூடாது என்று நினைக்கிறாராம்.. தங்கள் தரப்பில் உள்ளவர்கள் எதையாவது பேசப்போய், அதையே ஒரு காரணமாக எடுத்து வைத்துக் கொண்டு, அனுதாபம் தேட ஓபிஎஸ் முயலலாம் அல்லது ஆதாரமாக சேகரிக்கலாம் என்பதால், இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

வாய்ப்பூட்டு

வாய்ப்பூட்டு

அதுவும் குறிப்பாக, தென்மண்டல நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை வாய்மொழியாக பிறப்பித்துள்ளாராம்.. தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்குலத்தோர் சமூகத்து விஐபிக்கள் யாரும் கட்சி நிலவரம் குறித்து இப்போதைக்கு மீடியாக்களிடம் எதுவும் பேசவேண்டாம், எதையாவது சொல்லப்போய் அதைவைத்துக் கொண்டு ஓபிஎஸ் தரப்பு பிரச்சினையை உண்டாக்கலாம் என்பதால் அமைதி காக்க சொல்லி உள்ளாராம் எடப்பாடி.. அதனால், கோர்ட் தீர்ப்பு வரும், வாய் திறந்துவிடாதீர்கள் என்றும் கடிவாளம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடிவாளங்கள்

கடிவாளங்கள்

இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. முக்குலத்தோர் புள்ளிகளை இழுக்கவே, சசிகலா + ஓபிஎஸ் மறைமுக வேலை பார்த்து வருவதாக செய்திகள் கசிந்த நிலையில்தான், இப்படி ஒரு உத்தரவை எடப்பாடி பிறப்பித்துள்ளாராம்.. ஒவ்வொரு செயல்பாட்டிலும், மிக மிக நுணுக்கமாக பார்த்து காய் நகர்த்தி வரும் எடப்பாடி பழனிசாமியின் கையில் அதிமுக வந்து விழுமா? அல்லது ஓபிஎஸ் தட்டிசெல்வாரா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+