திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும், ஆனால் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் திமுக பணித்தது. இதுதொடர்பாக கமல்ஹாசன் நேற்று ஆலோசனை நடத்தியபோது உதயசூரியன் சின்னம் வேண்டாம். டார்ச்லைட் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் கமலிடம் உறுதிப்பட கூறினர். இது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்துள்ளன. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்பட மொத்தம் 21 கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளது.

இதனால் திமுக கூட்டணி பலமாக இருப்பதாக தோன்றுகிறது. இருப்பினும் தொகுதி பங்கீட்டில் பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
6 தொகுதி கேட்ட மநீம
நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. மக்கள் நீதி மய்யம் சார்பில் குறைந்தபட்சம் 6 சட்டசபை தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக ஏற்கவில்லை. ஏற்கனவே கமல்ஹாசனை திமுக ராஜ்யசபா எம்பியாக்கி உள்ளது. உள்ளார். ராஜ்யசபா சீட் என்பது 6 சட்டசபை தொகுதிகளுக்கு சமம் என அரசியல்வாதிகள் சொல்வது உண்டு.
2 தொகுதி + உதயசூரியன் சின்னம்
இதனால் சட்டசபை தேர்தலுக்கு திமுகவோ 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்குவதாகவும், அதிலும் திமுகவின் சின்னமான உதயசூரியனில் தான் போட்டியிட வேண்டும் என்று கூறியது. இதனால் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அதிருப்தியானார்கள். பேச்சுவார்த்தை சக்சஸ் ஆகவில்லை. இதையடுத்து நேற்று மாலையில் கமல்ஹாசன் இதுதொடர்பாக சென்னையில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
திமுகவிற்கு எதிர்ப்பு
மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கமல்ஹாசன், கட்சியின் துணை தலைவர் மவுரியா, பொது செயலாளர் அருணாச்சலம் உள்பட 220 பேர் வரை பங்கேற்றனர். அப்போது நிர்வாகிகள் திமுகவின் விருப்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
உதயசூரியன் வேண்டாம்
மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டிட வேண்டாம் என்று கமல்ஹாசனிடம் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற 90 பேர் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். அதனை கமல்ஹாசன் கேட்டுள்ளார். இருப்பினும் இறுதி முடிவு கமல் கையில் தான் உள்ளது என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கமல்ஹாசனின் முடிவு என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக சொல்வதை கமல்ஹாசன் கேட்டு 2 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை இறக்குகிறாரா? இல்லாவிட்டால் டார்ச்லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என சொல்கிறாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications