வீடுகட்ட சேமித்து வைத்திருந்த.. ரூ.5 லட்சத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த ஊழியர் தற்கொலை.. தொடரும் சோகம்
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாடி பலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். கடன் வாங்கிய பணத்தை இதில் விரயமாக்கியதால், வட்டி கட்ட வழியின்றி சிலர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையானது.
ஆன்லைன் ரம்மிக்கு முடிவு கட்டும் விதமாக கடந்த ஆண்டு இறுதியில் அப்போதைய அ.தி.மு.க அரசு, சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்தது. ஆனால் கடந்த ஆகஸ்டு 3-ம் தேதி தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆன்லைன் ரம்மி
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. இதனால் இதற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் பின்வருமாறு:-

பனியன் நிறுவன ஊழியர்
திருப்பூர் பழையகாடு ராஜமாதா நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மீனா. இந்த தம்பதிக்கு 6 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். வீடு கட்டுவதற்காக இருவரும் சிறுக. சிறுக 5 லட்சம் ரூபாயை சேமித்து வைத்திருந்தனர்.

ரூ.5 லட்சத்தை இழந்தார்
ஆனால் இந்த பணத்தை வைத்து சுரேஷ் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதனை மனைவி அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் சுரேஷ் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தொடர்ந்துள்ளார். வீடு கட்டுவதற்காக வைத்திருந்த சேமிப்பு பணம் ரூ.5 லட்சத்தையும் ஆன்லைன் ரம்மியில் அவர் இழந்துள்ளார். இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் வீட்டில் அனைவரும் உறங்கிய நிலையில், சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுரேஷ் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications