Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2022ஆம் ஆண்டில் ’இரட்டைக் குழந்தைகள்’ அதிகம் போலயே! எலான் முதல் நயன்தாரா வரை! பிரபலங்கள் லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : 2022 ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை '2022 நினைவுகள்' என்ற பெயரில் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.. அந்த வகையில் இந்த வருடம் பல பிரபலங்கள் தங்கள் வாரிசுகளை இந்த உலகிற்கு வரவேற்று இருக்கிறார்கள். குறிப்பாக இரட்டை குழந்தைகளின் ஆதிக்கம் இந்த ஆண்டு அதிகமாக இருந்திருக்கிறது.

மகிழ்ச்சி, சோகம், பரபரப்பு, விறுவிறுப்பு என பலவற்றையும் கலந்து கட்டிக் கொடுத்த 2022 ஆம் ஆண்டு விடைபெற்று 2023 ஆம் ஆண்டு வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.அதேவேளையில் நினைவுகளை அசைபோடுவது என்றுமே சுகம் தான்..

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் பல்வேறு நிகழ்வுகள் நடந்திருக்கிறது. குறிப்பாக பல பிரபலங்கள் தங்கள் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கின்றனர் அதில் இரட்டைக் குழந்தைகளின் வரவு அதிகமாக இருந்திருக்கிறது அவர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

இந்த பட்டியலில் தமிழகத்தை பொறுத்தவரை முதல் இடத்தில் இருப்பது நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் ஜூன் ஒன்பதாம் தேதி இவர்கள் சென்னையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் ஆகி 4 மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். நான்கே மாதத்தில் குழந்தைகள் பிறந்தது எப்படி என பரபரப்புகள் கிளம்பி நிலையில் வாடகை தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றெடுத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு திருமணத்திற்கு முன்னதாகவே பதிவு திருமணம் செய்து கொண்டதும் சட்டப்படியே தம்பதியினர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததாக அறிக்கையை அளிக்கப்பட்டதால் இந்த விவகாரம் ஓய்ந்தது.

நமீதா - வீரா

நமீதா - வீரா

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபல கவர்ச்சி நடிகை வலம் வந்த நடிகை நமிதா 2017 ஆம் ஆண்டு வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அரசியலில் களமிறங்கிய அவருக்கு அதன்பிறகு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தனது மகன்களுக்கு கிருஷ்ண ஆதித்யா மற்றும் கியான்ராஜ் என பெயரிட்டுள்ளார் நமீதா. பெயர் சூட்டும் விழா புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் இருந்தார்.

எலான் மஸ்க் - ஷிவோன்

எலான் மஸ்க் - ஷிவோன்

டெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தற்போது ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளவருமான எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் பணியாற்றிய ஷிவோன் ஸிலிஸ் மூலம் 2021 ஆம் ஆண்டு இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் அதனைப் பற்றி ஏதாவது கண்டு கொள்ளவில்லை. ஏற்கனவே எலான் மஸ்கின் முதல் மனைவி ஜஸ்டைன் மஸ்க் மூலம் இரட்டைக் குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் என ஐந்து குழந்தைகள் உள்ளனர். மேலும் கிளைரா பெளச்சர் என்ற பெண் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதன் மூலம் மொத்தம் ஒன்பது குழந்தைகளுக்கு தந்தையானார் எலான் மஸ்க்.

இஷா அம்பானி - ஆனந்த்

இஷா அம்பானி - ஆனந்த்

இந்தியா மட்டுமல்லாது உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகாஷ் அம்பானி மகள் இஷா அம்பானிக்கு நவம்பர் மாதம் ஆண் பெண் இன இரண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தன. பெண் குழந்தைக்கு ஆதியா என்றும் ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா என்றும் பெயர் சூட்டினர். இதையடுத்து இந்தியா வந்த பேரக் குழந்தைகளை மிகப் பிரமாண்டமாக வரவேற்றார் முகேஷ் அம்பானி. சிறப்பு விமானத்தில் இந்தியா வந்த அவர்களுக்கு 300 கிலோ தங்கம் வழங்கி ஆச்சரியப்படுத்தியதோடு அவர்களை கவனித்துக் கொள்வதற்கு என சிறப்பு மருத்துவர்கள் நர்சுகள் பிஎம்டபிள்யூ கார் என மாஸ் காட்டினார் முகேஷ்.

பிற பிரபலங்கள்

பிற பிரபலங்கள்

இரட்டைக் குழந்தைகள் பட்டியலில் நான்கு பிரபலங்கள் இருக்கும் நிலையில் பிரணிதா - சுபாஷ் நித்தின் ராஜு, காஜல் அகர்வால் - கௌதம் கிச்சலு, ஆலியா பட் - ரன்பீர் கபூர், நரேன், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ், சோனம் கபூர்- ஆனந்த் அகுஜா, சௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் என பல்வேறு பிரபலங்களும் இந்தாண்டில் தங்கள் வாரிசுகளை வரவேற்று இருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+