சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீன் பை சீன்.. "அக்னிகலசமும், 6 காலண்டரும்".. போட்டோ ஆதாரங்களுடன் வந்த மாரிதாஸ்.. அடுக்கடுக்கான கேள்வி

ஜெய்பீம் குறித்து மாரிதாஸ் ட்வீட் போட்டு கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "ஆதிக்க அதிகார வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தே ஆக வேண்டும்... ஆனால் அதை பேசுவதாக சொல்லி திட்டமிட்டு, ஒரு சமூகத்தையே சாதிவெறியர்களாகக் கொடூரமாகக் காட்ட முயல்வதும் நியாயமா? தெரியாமல் நடந்துவிட்டது என்பது வடிகட்டிய பொய்" என்று ஜெய்பீம் படம் குறித்து மாரிதாஸ் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

ஜெய்பீம் படம் மிகப்பெரும் அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதற்கு படத்தில் ஒரு காட்சியில் வரும் காலண்டர் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

குறிப்பாக, அந்த காட்சியில் 6-4-1995 என்ற நாள் குறிக்கப்பட்டிருக்கும்... காலண்டரில் அக்னி கலச படமும் இடம்பெற்றிருக்கும்.

சென்னை மேயர் யார்? உதயநிதி பிடிவாதம்! மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! நடக்கப்போவது என்ன? சென்னை மேயர் யார்? உதயநிதி பிடிவாதம்! மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! நடக்கப்போவது என்ன?

 சர்ச்சைகள்

சர்ச்சைகள்

இந்த சீன்கள்தான், கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் பரபரப்பையும், அதையொட்டி சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.. இது தங்கள் சமூக மக்களை புண்படுத்துவதாக உள்ளதென சொல்லி, வன்னிய சங்கங்களும், அவர்கள் சார்ந்த கட்சிகளும், முக்கியமாக பாமகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன... இதையடுத்து, அந்த குறிப்பிட்ட சீன் மாற்றப்பட்டது.. அக்னி கலசம் படம் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக சரஸ்வதி படம் இடம்பெற்ற காலண்டர் காட்சியில் இடம் பெற்றது.

 திரைப்படம்

திரைப்படம்

ஆனால் தொடர்ந்து சர்ச்சை ஓயவில்லை.. இதனால், இந்த சீன் திரைப்படத்தில் எப்படி இடம்பெற்றது என்பது குறித்து டைரக்டர் ஞானவேல் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்... சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்தக் காலண்டர் படம் ஷூட்டிங்கின்போதும், போஸ்ட் புரடெக்ஷன் பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை என்றும் விளக்கம் தந்திருந்தார்.. அத்துடன் வருத்தமும் தெரிவித்திருந்தார். எனினும் தொடர் சர்ச்சை நிலவுகிறது..

 அறிக்கை

அறிக்கை

எத்தனையோ பிரபலங்கள் சர்ச்சை தொடர்பான அறிக்கை விடுத்தும், பேட்டிகள் தந்தும், விளக்கங்களை சொல்லி வரும் நிலையில், பாஜகவின் ஆதரவாளராக கருதப்படும் மாரிதாஸ் மீண்டும் இதே பிரச்சனையை கிண்டி உள்ளார்.. மீண்டும் இதே காலண்டர் விஷயத்தை வைத்து கேள்வி எழுப்பி உள்ளார்.. மொத்தம் 6 காலண்டர்கள் அந்த படத்தில் எங்கெங்கு இடம்பெறுகிறது என்பது குறித்து, 8 ட்வீட்களை போட்டு விளக்கி உள்ளார் மாரிதாஸ். அந்த ட்வீட்கள் இவைகள்தான்:

 கட்டிடம்

கட்டிடம்

"1.05 நிமிடத்தில் வரும் இந்த காட்சியில் ஒரு மெடிக்கல் (மருந்தகம்) வருகிறது. இதில் woodwards gripe water calendar வருகிறது. மெடிக்கல் என்பதால் woodwards gripe water 1995களில் பிரபலம் என்பதாலும் இந்த காட்சியில் இந்த காலண்டர் வைத்துள்ளனர். இதுவும் சரி! அடுத்து

"1.24 நிமிடத்தில் மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தில் காட்சி வைத்துள்ளனர். அதில் நீதிமன்ற சிம்பல் உடன் கூடிய காலண்டர் வைத்துள்ளனர். படக்குழுவினருக்கு எங்கே எப்படியான காலண்டர் 1995களில் வைத்திருப்பர் என்று திட்டமிடல் இருந்துள்ளது. அடுத்து

"1.33 நிமிடத்தில் ஒரு ரைஸ் மில் முதலாளி போனில் பேசும் காட்சி. அதில் பின்புலத்தில் ரைஸ் மில் என்று எழுதப்பட்ட காலண்டர் வைத்துள்ளனர். அடுத்து

 ஞானவேல்

ஞானவேல்

"1.50நிமிடத்தில் போலிஸ் உயர் அதிகாரி மக்கள் குறை கேட்கும் கூட்டம் ஒரு தொண்டு நிறுவன நிறுவன கட்டிடத்தில் நடத்துகிற காட்சி. அந்த காட்சியில் குமர விகடன் காலண்டர் வைத்துள்ளனர். இது கல்யாண மண்டபங்கள் ஆரம்பித்து சமுதாயக் கூடங்கள் வரை இருக்கக் கூடிய பொதுவான காலண்டர். அடுத்து

"2.14நிமிடத்தில் போலிஸ் உயர் அதிகாரிகள் பேசிக் கொள்ளும் காட்சி. அதில் வைக்கப்பட்டுள்ள காலண்டரில் இருக்கும் சின்னம் முக்கியம். அது indian police service சின்னம். ஆக எந்த இடத்தில் என்ன காலண்டர் வைக்க வேண்டும் என்பதைச் சரியாகத் திட்டமிட்டுள்ளனர் ஜெய்பீம் சூர்யா ஞானவேல் குழுவினர். அடுத்து

"2.04 நிமிடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த காட்சியில் கொடூரமான ஈவு இரக்கம் இல்லாத ஒரு போலிஸ் வீட்டில் உள்ள காலண்டர் வன்னியர் சமூகத்தைப் பிரதிபலிக்கும் அக்னி கலசம். தற்போது அது இந்து கடவுளான லட்சுமி தேவி காலண்டர் மாற்றியுள்ளனர். ஆக சரியான திட்டமிட்டலுடனே வைத்துள்ளனர் காலண்டர்களை.

 வடிகட்டிய பொய்

வடிகட்டிய பொய்

"கதை அற்புதமானது அவசியமானது, ஆதிக்க அதிகார வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் அதைப் பேசுவதாகச் சொல்லித் திட்டமிட்டு ஒரு சமூகத்தையே சாதிவெறியர்களாகக் கொடூரமாகக் காட்ட முயல்வதும் நியாயமா? தெரியாமல் நடந்துவிட்டது என்பது வடிகட்டிய பொய்" என்று பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    JaiBhim-க்கு எதிராக Rajput Karni Sena | Oneindia Tamil
     கருத்துக்கள்

    கருத்துக்கள்

    மாரிதாஸ் ட்வீட்களுக்கு, மாறி, மாறி ட்விட்டர்வாசிகள் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. திரௌபதி படம் வரும்போது எங்கே போனீங்க? அப்போ வந்து கேள்வி கேட்பதுதானே? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. மேலும் சிலர், சரியா சொன்னீங்க அண்ணா.. திட்டமிட்டு வைத்துள்ளார்கள் அண்ணா.. இதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்" என்றும் ஆதரவு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    English summary
    Maridhas raises questions about Jaibhim film and his eight tweets
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X