"விலாங்குமீன்".. ஓஹோ.. இதான் மேட்டரா? நைஸா நழுவிய வாசன்.. தலை தப்பியதா தமாகா.. ஓபிஎஸ்சுக்கு தலைவலி
வாசன் எடுத்த முடிவால், தமாகா - பாஜக இடையே சுமூக சூழல் மேலும் வலுவாகி உள்ளது
சென்னை: வரப்போகும் இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட உள்ள நிலையில், இதன்மூலம், தமாகா - பாஜக இடையே ஏற்பட ஒருவித நிம்மதி உணர்வு வந்துள்ளது.. இதற்கு என்ன காரணங்கள்?
விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க போகிறது.. இங்கு போட்டியிடுவதில், திமுக கூட்டணியைவிட, அதிமுக கூட்டணியிலேயே நிறைய குழப்பங்கள் நிலவின..
அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ளதால், எப்படியும் கூட்டணி கட்சியான தமாகாவுக்கு, ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது..

ஜாக்ரதை
ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜிகே வாசன, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை தமாகா ஏற்றுக் கொண்டது என்றும், தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.. அதன்படி, அதிமுகவே ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்க போகிறது.. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய நெருக்கடி வர வாய்ப்புள்ளதாகவும், மிக ஜாக்கிரதையான காய்நகர்த்தல்கள் மட்டுமே அதிமுகவில் இப்போது தேவை என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

வாசன் மூவ்
அதேசமயம், கூட்டணிக்காக தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டதாக சொன்னாலும்கூட, தமாகா ஏன் ஈரோடு கிழக்கில் போட்டியிடவில்லை என்ற சந்தேகமும், அதை சுற்றி சில காரணங்களும் பின்னப்படுகின்றன.. தமாகாவை பொறுத்தவரை, சின்னம் பிரச்சனை தலையாய பிரச்சனையாக உள்ளது.. தொகுதியை விட்டுத்தந்தாலும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்ற குழப்பம் உள்ள நிலையில், புது சின்னத்தில் போட்டியிட்டு ரிஸ்க் எடுக்கவும் விரும்பிவில்லை என்கிறார்கள்.. இரண்டாவதாக, பாஜக தனித்து போட்டியிட நேர்ந்தால், தமாகாவுக்கு மேலும் நெருடலை தரவே செய்யுமாம்..

தர்மசங்கட வாசன்
காரணம், பாஜகவின் ஆதரவு கட்சிகளில் மிக முக்கியமான இடத்தில் உள்ளது தமாகா.. மேலிட பாஜகவின் ஆதரவை முழுமையாக பெற்றவர் வாசன்.. அதுமட்டுமல்ல, வரும் எம்பி தேர்தலில் வாசனையும் கணக்கில் வைத்துதான், கூட்டணியை பாஜக தயார் செய்து வருவதாக தெரிகிறது.. "உங்களை மத்திய அமைச்சராக்குகிறோம். பாஜகவில் இணைந்துவிடுங்கள்" என்று பாஜக தரப்பிலும் பலமுறை வாசனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொருமுறையும் அன்புடன் மறுப்பு தெரிவித்து வந்தார் வாசன். ஆனால், இந்த முறையும் இதே வேண்டுகோளை பாஜக வைத்துள்ளதால், அது தொடர்பாக ஓகே சொல்லும் முடிவிலும் வாசன் உள்ளதாக தெரிகிறது.. எப்படி பார்த்தாலும், பாஜகவுடன் நெருங்கி உள்ள சூழலில், நேருக்கு நேர் இடைத்தேர்தலில் ஒரே தொகுதியில் மோதி, கூட்டணியில் சங்கடத்தை ஏற்படத்தக்கூடாது என்ற தயக்கம் இருந்து வந்ததாகவே தெரிகிறது..

நெருடல்
இத்தனைக்கும், தமாகாவின் யுவராஜா, ஓபிஎஸ்ஸைவிட, எடப்பாடி பழனிசாமிக்கு மிக மிக நெருக்கமானவர்.. அந்தவகையில், எடப்பாடியையும் ஆதரித்து கொண்டு, பாஜகவையும் எதிர்த்து களமிறங்குவதா? என்பது நெருடலாக எழுந்ததாம்.இதெல்லாம் சேர்ந்துதான், இடைத்தேர்தலில் போட்டியிட தமாகா தயங்குவாக காரணங்கள் சலசலக்கப்படுகின்றன. எனினும், அதிமுகவே போட்டியிடும் என்று சொல்லி உள்ளதால், எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்க துணிந்துவிட்டதாகவே தெரிகிறது.. எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை நிறுத்தினால், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? என்பது அடுத்த கேள்வியாக எழுந்துள்ளது..

வாசன் கூல்
கொங்குவில் ஓபிஎஸ்ஸுக்கு, அவ்வளவாக செல்வாக்கு இல்லாத சூழலில், அவரது மூவ் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஒருவேளை, தமாகா கூட்டணியில், யுவராஜாவை வேட்பாளராக அறிவிக்க நேர்ந்தால், பேசாமல் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிடலாம் என்றுகூட ஓபிஎஸ் தரப்பு நினைத்ததாம்.. ஆனால், அதிமுகவே போட்டியிட முனைவதால், ஓபிஎஸ் தரப்பு, பதிலுக்கு வேட்பாளரை இறக்கியாக வேண்டிய சூழலுக்கு ஆளாகி உள்ளாராம்.. ஒருவேளை ஓபிஎஸ் தரப்பு இதில் வேட்பாளரை இறக்கினால், அவரும் "அதிமுக" வேட்பாளராகவே கருதப்பட நேரிடும் என்றே தெரிகிறது.. எது எப்படியோ.. ஆனால், தமாகா - பாஜக இடையே ஏற்படுவதாக இருந்த நெருடலும், தர்மசங்கடமும், சாதுர்யாமாக தவிர்க்கப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications