செல்வந்தவர் வீட்டு கொள்ளை கேஸில் பெரிய ட்விஸ்ட்! பிடிபட்ட நபர் யார் தெரியுமா? ஆடிப்போன சென்னை போலீஸ்
சென்னை: சென்னை புழல் பகுதியில் தொழிலதிபர் ஒருவரது வீட்டில் அரங்கேறிய சினிமா பாணியிலான துணிகர கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.. கடந்த 2 நாட்களாகவே இந்த கொள்ளை சம்பவம்தான் சென்னைவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.. கொலையாளி பற்றின துப்பு எதுவும் கிடைக்காத நிலையில், சென்னை போலீசார் இதுகுறித்த விசாரணையை துரிதமாக துவங்கினார்கள்.. தற்போது இந்த கொள்ளை சம்பவம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது..
மணிப்பூர் மாநிலத்தில் கம்பளிப் போர்வைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருபவர் விஜயகுமார்... இவர் சென்னை புழல் அடுத்த மகாவீர் கார்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சென்னை செல்வந்தர்
கடந்த 30ம் தேதி அதிகாலை நேரத்தில் இவரது வீட்டிற்குள் முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக புகுந்துள்ளது.. வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல், விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை கத்திமுனையில் மிரட்டி சிறைபிடித்ததுடன், அனைவரையும் கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது..
பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகள் மற்றும் 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு, தாங்கள் கொண்டு வந்த காரில் மின்னல் வேகத்தில் தப்பியும் சென்றுவிட்டது..
பீரோவில் தங்க நகைகள்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், புழல் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த துணிகர கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை பிடிக்க உடனடியாக 5 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பாதையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் அந்தப் பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
முக்கியமாக, சிசிடிவி காட்சிகளில் பதிவான கொள்ளையர்களின் கார் நம்பரை வைத்து போலீசார் தங்களது முதற்கட்ட விசாரணையை முன்னெடுத்தனர். தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் நெருங்கிய நிலையில், இந்த வழக்கில் தற்போது முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது..
திருடியவர் யார் தெரியுமா
இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதாக சென்னை எண்ணூர் பெரியகாசி கோவில் குப்பத்தைச் சேர்ந்த 28 வயதான ராகுல் மற்றும் புழல் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பிரவீன் குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், பிடிபட்ட ராகுல் ஒரு வழக்கறிஞர் என்பது தெரியவந்துள்ளது. ஒரு வழக்கறிஞரே தனது நண்பருடன் இணைந்து தொழிலதிபர் வீட்டில் கைவரிசை காட்டியது போலீசார் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துள்ள போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மீதமுள்ள 4 கூட்டாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆடிப்போன சென்னை போலீஸ்
தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரையும் பிடிக்க தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் மற்ற குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகை மற்றும் பணம் மீட்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகம் கொண்ட குடியிருப்பு பகுதியில் புகுந்து, ஒரு வழக்கறிஞரே முகமூடி அணிந்து கத்திமுனையில் கொள்ளையடித்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் கதிகலங்க வைத்து வருகிறது..!!
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications