தூண்டிலை "அங்கே" வீசிய ஸ்டாலின்.. நிமிர்ந்தெழுந்த ஆம் ஆத்மி.. விஸ்வரூப பாஜக.. 5 மாநில தேர்தல் அதிர்வு
சென்னை: பாஜகவை பொறுத்தவரை 2 விதமான அரசியலை முன்னெடுக்கும்.. ஒன்று தேர்தலுக்கு முந்தைய அரசியல், மற்றொன்று தேர்தலுக்கு பிந்தைய அரசியல்.
இதில் தேர்தலுக்கு பிந்தைய அரசியலில்தான் பாஜகவின் வியூகங்கள் பல கட்சிகளையும் மலைக்க வைக்கும்.. இந்த வியூகம்தான், பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி என்ற அஸ்திவாரத்துக்கு காரணமாக அமைந்து வருகின்றன.
அந்தவகையில், நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் என்பது, இந்த வருடத்தில் மறக்க முடியாத அரசியல் அதிர்வாகும்.. வழக்கமான தேர்தல்களில் இருந்து இந்த 5 மாநில தேர்தல் லேசாக வித்தியாசப்பட்டது.. அதற்கு காரணம், பாஜக முன்னெடுத்த ஆபரேஷன் லோட்டஸ்.
இந்திய பெருங்கடல் பகுதியில் சுற்றும் சீன கப்பல்கள்.. உன்னிப்பாக கண்காணிக்கிறோம்- இந்திய கடற்படை

ஆபரேஷன் லோட்டஸ்
மக்களுக்கு ஒத்துவராத ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையையும் எதிர்க்கிறோம். ஒவ்வொரு மாநில அரசியலும் மாறுபடும். உ.பி-யில் ஜெயித்த பா.ஜ.க., கோவாவில் ஏன் முட்டி நிற்கிறது? மராட்டிய மாநில தாக்கம் கோவாவில் இருக்கும். பஞ்சாபில் ஏன் வெற்றி பெற முடியவில்லை? இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பா.ஜ.க ஒன்றும் இமாலய வெற்றியெல்லாம் பெறவில்லை. தி.மு.க மக்களுக்குச் சேவை செய்ய உருவானக் கட்சி. சமூகநீதி, சுயமரியாதை, பெண்ணடிமை விடுதலை, பொருளாதார வளர்ச்சி எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி.

டிஜிட்டல்
கடந்த 2014-ல் இருந்து பாஜக தன்னுடைய கட்சியை அபாரமாக வளர்க்க ஆரம்பித்தது என்றே சொல்லலாம்.. டிஜிட்டல் முறையில் தன்னுடைய அரசியலை மக்களிடம் கொண்டு சென்று வருகிறது.. நவீனத்துவப்படுத்தி வருகிறது.. புது புது திட்டங்களை கையில் எடுத்து வருகிறது.. ஊழல் புகார்களை இல்லாமல் பார்த்து கொண்டு வருகிறது.. மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தி வருகிறது.. பொறுப்பாளர்களை பலம் வாய்ந்தவர்களாக நியமித்து வருகிறது.. ஆனால் இதற்கெல்லாம் முழுக்க முழுக்க சோஷியல் மீடியாவையே அதிகம் நம்பி இருப்பதையும் மறுக்க முடியாது.

மாஸ் வெற்றி
எனினும், அருணாச்சல பிரதேசம், கோவா, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது.. இதைதவிர, அசாம், பிகார், ஹரியானா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியையும் நடத்தும் அளவுக்கு வளர்ந்தது.. இதற்கு அடுத்தக்கட்டமாக, கூட்டணி ஆட்சி என்பதில் இருந்து விலகி, தனித்து போட்டியிடும் அளவுக்கு மணிப்பூரில் கால் வைத்தது பாஜக.

7 கட்டங்கள்
இப்படி ஒவ்வொரு முறை தேர்தலிலும் பாஜகவின் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.. அந்தவகையில், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில், 4 மாநிலங்களிலும் பாஜக வென்றது.. இந்த தேர்தலின் வெற்றியானது, 2024 எம்பி தேர்தலுக்கு விதையாக இருக்க போகிறது என்று சொல்லும் அளவுக்கு, பரபரப்பாக பேசப்பட்டது.. 403 தொகுதிகளைக் கொண்ட உபிக்கு கடந்த பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக வாக்கு பதிவு நடந்தது.. இதில் பாஜக 273 தொகுதிகளை கைப்பற்றிவிட்டது..

தவிடுபொடி
இது கடந்த தேர்தலைவிட 49 தொகுதிகள் குறைவு என்றபோதிலும் வெற்றியை பதிவு செய்தது. எனினும் சமாஜ்வாதி கட்சியின் வளர்ச்சி, பாஜகவுக்கு லேசான கலக்கத்தை தந்ததை மறுக்க முடியாது. அதேபோல, மணிப்பூர் சட்டசபை தேர்தலில் மொத்தம் 60 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்றது.. கோவா தேர்தலில், மொத்தமுள்ள 40 இடங்களில், 20 இடங்களில் பாஜக வென்றது.. உத்தரகாண்ட்டில் நடந்த தேர்தலில் மொத்தம் 70 தொகுதிகளில், 47 இடங்களில் பாஜக வென்றது.. பஞ்சாப் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவுக்கு அதிர்ச்சியை தந்தது.

சல்லி சல்லியா போச்சே
இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள், தேசிய அரசியல் களத்தில் பல்வேறு அதிர்வலைகளை உண்டுபண்ணியது.. கட்சி தாவல்கள், பேரம் பேசுவது, ஆட்களை இழுப்பது, கடத்துவது, பணிய வைப்பது போன்ற வழக்கமான பிளான்கள் பாஜகவுக்கு இந்த முறையும் கைகொடுத்தன.. அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள், தெரு தெருவாக சென்று, வாக்கு சேகரிக்கும் நிலைமையும் ஏற்பட்டது.. அதேபோல, ஆம் ஆத்மியின் வளர்ச்சியானது, பிரம்மிப்பை தந்தது.. அதிலும், காங்கிரஸின் கோட்டைகளை ஒவ்வொன்றாக தகர்த்து நொறுக்கிவிட்டு, மேலே போய் கொண்டே இருக்கிறது.. வழக்கமாக எந்த தேர்தல் என்றாலும், பாஜகவுக்கு எதிரி கட்சியாக காங்கிரஸ் மட்டுமே கருதப்பட்டு வந்த நிலையில், அதை முந்திக் கொண்டு ஆம் ஆம்தி நடைபோட்டது நாட்டு மக்களின் கவனத்தை பெற்றது.

உந்துசக்தி
இந்த 5 மாநில தேர்தல் வெற்றியானது, தமிழக அரசியலிலும் ஒரு புது மாற்றத்தை உண்டுபண்ணியது.. பாஜகவை அதுவரை கடுமையாக எதிர்த்து பேசிவந்த திமுக, இந்த 5 மாநில தேர்தல் பாஜக வெற்றிக்கு பிறகு, தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த "ஒன்றிணைய வேண்டும்" என்ற முழக்கத்தை முதல்வர் ஸ்டாலின் முனைப்பாக முன்னெடுக்கவும் காரணமாக அமைந்தது... அந்த வகையில், 5 மாநில தேர்தல் வெற்றி என்பது, காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும், ஏன் இங்கே திமுகவுக்கும்கூட மிகப்பெரிய உந்துசக்தியை ஏற்படுத்திவிட்டு போனது என்று சொன்னால், அது மிகையாகாது..!!