மெட்ரோ ரயில் பணி.. சென்னை அடையாறு ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை.. வேகமெடுக்கும் பணிகள்
சென்னை: சென்னையில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில், அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரயில் பாதை அமைப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணி வருகிற 15-ம் தேதி தொடங்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணி நிமித்தமாகவும் பல்வேறு தேவைகளுக்காகவும் சென்னை நகருக்கு வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

மெட்ரோ ரயில்
குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் சென்னையின் போக்குவரத்து நெரிசல் பற்றி தனி புத்தகமே எழுதலாம் என்ற அளவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி எந்த இடத்திற்கும் செல்ல முடியாத நிலைதான் சென்னையில் காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.

3 வழித்தடங்களில்
தற்போது 55 கி.மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 118.9 கி.மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

மாதவரம் -சிறுசேரி சிப்காட் இடையே
இந்த 3 வழித்தடங்களிலும் மொத்தம் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் 48 ரயில் நிலையங்களும் மாதவரம் -சிறுசேரி சிப்காட் இடையே 50 ரயில் நிலையங்களும் அமைகின்றன. அதேபோல், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் 30 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ஆற்றின் கீழே பாலம்
அதன் ஒருபகுதியாக வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு டெப்போ நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. அடையாறு ஆற்றின் கீழே அமைய இருக்கும் இந்த சுரங்கப்பாதை மக்களை வியக்க வைக்கும் படியாக அமைந்துள்ளது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே கூவத்தின் கீழ் சுரங்க ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை
இதே போல அடையாறில் உள்ள ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான மண் பரிசோதனை கடந்த மாதமே நடைபெற்றது. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications