"அண்ணாமலை அறிவுப்பூர்வமா பேசுவார்னு நினைச்சேன்” சொன்னதை நிரூபிக்கணும் இப்ப.. பொங்கிய அமைச்சர் மா.சு!
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெண்டரே இன்னும் நிறைவடையவில்லை. அதற்குள் அதில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என அண்ணாமலை கூறுவது எந்த வகையில் நியாயம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முறைகேடு குற்றச்சாட்டு
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் திமுக அரசு மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். தனியார் ஹெல்த் மிக்ஸ் பொருளுக்கு பதிலாக ஆவின் பொருளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. பின்னர், இந்த முடிவு மாற்றப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு 77 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டெண்டரை இறுதி செய்வதில் தனிநபர்கள் இருவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எப்படி அனுமதித்தார்? இதற்கு அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

அறிவுப்பூர்வமா பேசுவார்னு நினைச்சேன்
இந்நிலையில், சற்று முன்பு சென்னை அம்பத்தூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சுகாதாரத்துறை மீது முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அண்ணாமலை அறிவுப்பூர்வமாக புகார் வைப்பார் என நினைத்தேன். ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் எனத் தெரிவித்தார்.

டெண்டரே இன்னும் முடியல
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "டெண்டர் நிறைவடைவதற்கு முன்பே முறைகேடு நடந்துள்ளதாக அண்ணாமலை கூறுகிறார். இப்போதுதான் டெண்டர் விடப்பட்டிருக்கிறது. இன்னும் நிறைவடையவில்லை. அதற்குள் அதில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என அண்ணாமலை கூறுவது எந்த வகையில் நியாயம்? டெண்டர் பணிகள் முடியும் முன்பே, ஊழல் புகார் கூறுவதை ஏற்க முடியாது. அண்ணாமலை இந்த புகாரை நிரூபிக்க வேண்டும்.

யூகமா சொல்றாரு
அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து துறையின் அதிகாரி தீபக் ஐ.ஏ.எஸ்ஸிடம் கேட்டோம். டெண்டரே முடிவடையாதபோது இதில் எப்படி தவறு நடந்திருக்கும் என்றுதான் அவரும் சொல்கிறார். அண்ணாமலை யூகத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டியுள்ளார். எப்படி நஷ்டம் என கணக்கு போட்டீர்கள் என அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். அவரிடம் இருந்து பதிலை பெற வேண்டும். அவர் சொல்லும் பதிலில் உண்மை இல்லை என்றால் மற்ற துறைகளின் மீதும் அவர் வைத்துள்ள புகார்களின் உண்மைத்தன்மை வெட்டவெளிச்சமாகிவிடும்.

அண்ணாமலை நிரூபிக்கட்டும்
தவறு நடந்திருக்கிறது என்று சொன்னால் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், டெண்டரே முடிவடையாத பணியில் இவ்வளவு கோடி இழப்பு என்று சொன்னால் அது நியாயமே இல்லாத ஒன்று. டெண்டர் நிறைவடைந்த பிறகு, அண்ணாமலை சொல்வது போல ஏதாவது முறைகேடு நடந்தது என நிரூபிக்கட்டும்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications