24 மணி நேரம் தான் கெடு.. விவரம் தெரிஞ்சு பேசுங்க அண்ணாமலை.. கொந்தளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பாக அதன் முழு விபரங்களையும் தெரிந்து கொள்வது அவசியம் எனவும், எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்து புரிதலின்றி அண்ணாமலை விமர்சித்துள்ளார் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , பிஜிஆர் எனர்ஜி என்ற தகுதியே இல்லாத நிறுவனத்திற்கு ரூபாய் 4,400 கோடி காண்ட்ராக்ட்டை தமிழக மின்வாரியம் கொடுத்திருக்கிறது என குற்றம் சாட்டினார்.
மேலும் இனி அடிக்கடி தமிழ்நாட்டில் மின்வெட்டு வரலாம் எனவும் மக்கள் வீடுகளில் யூபிஎஸ், ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

செந்தில் பாலாஜி விளக்கம்
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பாக அதன் முழு விபரங்களையும் தெரிந்து கொள்வது அவசியம் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, " தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பாக அதன் முழு விபரங்களையும் தெரிந்து கொள்வது அவசியம் எனவும், எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்து புரிதலின்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார் எனக் கூறினார்.

இபிஎஸ், தங்கமணியிடம் கேள்வி
கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய பணிகள் கடந்த 10 ஆண்டுகால முந்தைய அதிமுக ஆட்சியின் போது இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மின் திட்டத்திற்கான வைப்புத்தொகை 3% என குறிப்பிட்டு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அண்ணாமலை கூறிய புகாரை நிரூபிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பி.ஜி.ஆர் நிறுவனத்துடன் கடந்த 2019-இல் அதிமுக ஆட்சியில் தான் ஒப்பந்தம் போடப்பட்டது. இபிஎஸ், தங்கமணியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை அண்ணாமலை தற்போது முன்வைத்துள்ளார்.

நிலக்கரி பற்றாக்குறை
நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு போது கூட தமிழகத்தில் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டது என தெரிவித்தார். எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்து அண்ணாமலைக்கு புரிதலில்லை. அரசுக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் விமர்சித்து உள்ளார். 2006ல் துவக்கப்பட்ட திட்டம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. அதிமுக ஆட்சியில் டெபாசிட் தொகை 10 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டதால்தான் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

24 மணிநேரம் கெடு
2020ல் மின்திட்டங்களுக்கு வைப்பு தொகை 3% என மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. 2019-ல் போடப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படியே தற்போது ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. எனவே, அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் பற்றி 24 மணி நேரத்தில் தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்." என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications