மின்கம்பம் சேதம்.. ட்விட்டரில் கூறிய“பொண்டாட்டி கொடுமை”.. செந்தில் பாலாஜி கொடுத்த அல்டிமேட் கமெண்ட்!
சென்னை : மின்கம்பங்கள் சேதமானதாக ட்விட்டரில் பொண்டாட்டி கொடுமை என்ற பெயரில் இயங்கும் நபர் கோரிக்கை விடுத்த நிலையில், புகாருக்கு தீர்வு காணப்படும் எனக் பதிலளித்துள்ள தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு நகைச்சுவையாக அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
ட்விட்டரில் பொண்டாட்டி கொடுமை பி.ஹெச்.டி என்ற பெயரில் ஹேண்டிலை கும்பகோணம் காங்கிரஸ் கட்சியின் இணையவாசி என்ற அடைமொழியுடன் இணையவாசி ஒருவர் நடத்தி வருகிறார்.

ட்விட்டரில் மிகவும் பிரபலமான இந்த ஹேண்டிலில் பல சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வரும் இவர் இணையவாசிகளின் ஃபேவரிட் நெட்டிசன் ஆவார்.
இந்நிலையில் " கும்பகோணம் கோட்டம் திருப்பனந்தாள் பகுதி குறிச்சி ஊராட்சியில் திருநாவுக்கரசு நஞ்சை நிலத்தின் வழியே செல்லும் HT மின் கம்பம் சேதமடைந்துள்ளது. இக்கம்பங்கள் மாற்றப்படுமா என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு." என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்பு சகோதரரே கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. மின்கம்பங்கள் தொடர்பான உங்கள் புகருக்கு விரைந்து தீர்வு காணப்படும். உங்கள் ட்விட்டர் ஹேண்டில் சம்பந்தமாக ஏதேனும் புகார் இருந்தால் நீங்களே தீர்வு காண முயலுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது மின் துறை சம்பந்தமான புகார்கள் இருந்தால் தான் நான் சரி செய்ய முடியும் என்றும் பொண்டாட்டி கொடுமை என புகார் இருந்தால் அதனை நீங்கள்தான் சரி செய்ய வேண்டும் என பதில் அளித்துள்ள செந்தில் பாலாஜியின் கமாண்ட் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications