• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திடீர் "கட்டுப்பாடுகள்".. ஓகே சொன்ன ஸ்டாலின்.. என்ன காரணம்.. வெளியான பின்னணி..?

|

சென்னை: ஊரடங்கை அறிவிக்க போவதில்லை என்று சொல்லி வந்த திமுக தலைவர் ஸ்டாலின், திடீரென கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புக்கு ஓகே சொல்லி உள்ளார்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்த விவரம் கசிந்து வருகிறது.

கடந்த ஒரு மாதமாகவே கொரோனா தொற்று அதிகமாகி உள்ளது.. எனவே முழு லாக்டவுன் போடப்படுமா என்ற சந்தேகம் இருந்து கொண்டே வந்தது. இதனால் தேர்தல் ரிசல்ட்டை கூட தள்ளி வைத்துவிடுவார்களோ என்ற அச்சமும் சூழ்ந்து வந்தது.

எனினும், தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. ஆனால், இது காபந்து அரசாக இருக்கவும், எந்த விதமான அதிரடியையும் கையில் எடுக்க முடியாத சூழல் உள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.. இந்த மாவட்டங்களில் வெயில் கொளுத்த போகிறதாம்.. மக்களே உஷார்

 ரிசல்ட்

ரிசல்ட்

எனவே, எப்படியும் புதிய அரசு அமைந்துவிடும், அதற்கு பிறகு லாக்டவுன் பற்றின அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதனிடையே தேர்தல் ரிசல்ட் வந்துவிடவும், முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்காவிட்டாலும் அவரிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளார் ராதாகிருஷ்ணன்...

அதிகாரிகள்

அதிகாரிகள்

அவரை தொடர்ந்து, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் போன்ற உயரதிகாரிகளும் ஸ்டாலினை அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.. ஒவ்வொரு அதிகாரியாக ஸ்டாலின் வீட்டுக்கு போகும்போதே, ஒருவேளை ஸ்டாலினுக்கு அதிகாரிகள் எல்லாம் வாழ்த்து சொல்லதான் போயுள்ளார்களோ என்ற பேச்சு எழுந்தது.. அதற்கேற்றபடி ராதாகிருஷ்ணன் கையில் பூங்கொத்து இருக்கவும், அது வாழ்த்து என்றே கன்பார்ம் செய்யப்பட்டுவிட்டது..

 அதிகாரிகள்

அதிகாரிகள்

ஆனால், தொற்று 20 ஆயிரத்தை எட்டிவிடவும், அடுத்து ஊரடங்கு விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பற்றி ஸ்டாலினுடன் அதிகாரிகள் விவாதித்தார்களாம்.. அப்போதுதான், தீவிர கட்டுப்பாடு ஒன்றே இப்போதைக்கு ஒரே வழி என்று சொல்லி உள்ளார்கள். இதனிடையே, சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனை கூப்பிட்டு, சென்னையில் தொற்று பரவல் குறித்த ஒரு ரிப்போர்ட்டையும் கேட்டிருந்தாராம் ஸ்டாலின்.. அதை வைத்தும் ஆலோசனை நடந்துள்ளதாக தெரிகிறது..

இழப்பு

இழப்பு

இதே கட்டுப்பாடுகள் குறித்து செயல்படுத்தவும் அதிகாரிகள் கடந்த வாரம் முழுவதும் ஆலோசித்தனர்.. ஆனால், பொருளாதார இழப்பு வந்துவிடுமே என்றுதான் யோசித்துள்ளனர்.. இப்போது இந்த அறிவிப்பினை அமல்படுத்த ஸ்டாலின் ஓகே சொல்லி உள்ளார்.. ஆனாலும், தமிழகத்தின் நிதி நிலைமை மற்றும் மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் சரிகட்டுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அடுத்தகட்ட யோசனையில் உள்ளாராம் ஸ்டாலின்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இப்படி ஒரு கட்டுப்பாடுகளைதான், ஏற்கனவே யோசித்து வைத்திருந்து, புதிய அரசு வரும்வரை அதிகாரிகள் காத்திருந்ததாக கூறுகின்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததுமே பலவித முக்கிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று ஸ்டாலின் பிளான் செய்து வைத்துள்ள நிலையில், இப்போது, வேறு வழியில்லாமல், நிலைமை ரொம்ப மோசமாகி விடவும்தான், "கட்டுப்பாடுகள்" குறித்த அறிவிப்பை வெளியிட சம்மதம் மட்டும் தெரிவித்துள்ளாராம்..

 
 
 
English summary
MK Stalin discussed with Officials about New Restrictions of Tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X