சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்ல.. இதான் ஸ்டாலின்.. அவரை யாரும் கஷ்டப்படுத்தாதீங்க.. மா.செ.க்களுக்கு பறந்த பரபர உத்தரவு..!

விஜயகாந்த் மீதான நட்பு ஸ்டாலினுக்கு இறுகி கொண்டே போகிறது

Google Oneindia Tamil News

சென்னை: இதான் ஸ்டாலின்.. கட்சிகளுக்குள் ஆயிரம் பிரச்சனைகள், முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தன் ஆரூயிர் நண்பன் மனம் கஷ்டப்படக்கூடாது என்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. இதனால், திமுகவினர் மட்டுமல்லாமல், தேமுதிகவினரும் பூரித்து போயுள்ளனர்.

Recommended Video

    முதல்வர் Stalin போட்ட உத்தரவு!அதிரடியில் குதித்த செந்தில் பாலாஜி

    பதவியேற்பு விழாவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர்.. ஆனால், இதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை..

    அவருக்கு உடம்பு சரியில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.. அதனால், பதவியேற்பு விழாவுக்கு அவரால் செல்ல முடியாததால், ஸ்டாலின் வீட்டுக்கு சுதீஷூம், விஜய பிரபாகரனும் சென்றனர்.. அவர்களை உபசரித்து அன்பாக பேசினார் ஸ்டாலின்..

    இஎம்ஐ கால அவகாசம்.. ஸ்டாலின் எடுத்த சூப்பர் முயற்சி.. 12 மாநில முதல்வர்களுக்கு அவசர கடிதம்! இஎம்ஐ கால அவகாசம்.. ஸ்டாலின் எடுத்த சூப்பர் முயற்சி.. 12 மாநில முதல்வர்களுக்கு அவசர கடிதம்!

    உடல்நலம்

    உடல்நலம்

    விஜயகாந்த் உடல்நலம் குறித்தும் நீண்ட நேரம் விசாரிக்கவும், சுதீஷூம், விஜயபிரபாகரனும் ஆச்சரியப்பட்டு இந்த விஷயத்தை வீட்டுக்கு போய் போய், பிரேமலதாவிடமும் விஜயகாந்திடமும் சொல்லி உள்ளார்கள்.. இதை கேட்டதும் விஜயகாந்த் அப்படியே பூரித்து போய்விட, உடனே ஸ்டாலினிடம் போன் போட்டு பேசினார்.

    சிகிச்சை

    சிகிச்சை

    இதற்கு பிறகு விஜயகாந்த்துக்கு மறுபடியும் உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.. இதையறிந்த ஸ்டாலின், போன் செய்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.. அதுமட்டுமல்ல, ஆஸ்பத்திரிக்கு போன் செய்து, என் நண்பருக்கு இப்போ உடல்நலம் எப்படி இருக்கு என்று டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.. அத்துடன் உயர்தர சிகிச்சை தருமாறும் உத்தரவிட்டிருந்தார்.

    திமுக

    திமுக

    இயல்பாகவே, விஜயகாந்த்தை ஸ்டாலினுக்கு மிகவும் பிடிக்கும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், திமுக ஆட்சிக்கு வந்தால், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும், என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் முன்வைத்த நிலையில், முதல்வரின் இந்த செயல்பாடுகள் மாற்றத்தை தந்தது.

    கூட்டணி

    கூட்டணி

    இப்போதும் அதுபோலவே ஒரு செய்தி கசிந்து வருகிறது.. இந்த முறை தேர்தலில் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைத்து தேமுதிக படுதோல்வியை சந்தித்துவிட்டது.. தேமுதிகவுடன் கூட்டணி வைக்க திமுக தலைமைக்கு ஒரு விருப்பம் இருந்தது.. ஆனால், பிரேமலதாவின் அளவுக்கதிகமான ஆசை, கூட்டணி கதவை அடைக்கும்படி செய்துவிட்டது.

    தேமுதிகவினர்

    தேமுதிகவினர்

    இப்போது, தேமுதிக தோல்வி அடைந்துவிட்டதால், பலர் அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகிறார்களாம்.. பெரும்பாலானோர், திமுக பக்கம் சாய தயாராக இருக்கிறார்கள்.. இதனால், அந்தந்த திமுக மாவட்ட செயலர்களிடம் தங்களுடைய விருப்பத்தையும் சொல்லி வருகின்றனர்.. இந்த விஷயம் ஸ்டாலினுக்கு பறந்துள்ளது.. இதையடுத்து, தேமுதிகவினரை கட்சியில் சேர்த்து, விஜயகாந்த் மனம் நோகும்படி நடந்துக் கொள்ள வேண்டாம் என்று மாவட்ட செயலர்களுக்கு ஸ்டாலினிடமிருந்து உத்தரவு போயிருக்கிறதாம்..!

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    கட்சியின் பலத்தை மேலும் பெருக்கி கொள்ள, எதிர்க்கட்சியில் இருந்து தங்கள் கட்சிக்கு ஆட்களை இழுக்கும் முயற்சியில் பல கட்சிகள் உள்ளடி வேலை பார்த்து வருவதை கண்கூடாக காண்கிறோம்.. இப்படிப்பட்ட சூழலில், வரப்போகும் உள்ளாட்சி தேர்தலையும் பொருட்படுத்தாமல், நண்பர் மனம் கலங்கக்கூடாது என்று ஸ்டாலின் போட்ட இந்த உத்தரவு, அனைவரையும் மலைக்க வைத்து வருகிறது.

    English summary
    MK Stalin's friendship with Vijayakanth is surprising
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X