சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்".. சட்டசபையில் சுட்டிக் காட்டி அதிமுகவை கொட்டிய ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படத்தை போல பிப்.26 முதல் மே 6-ஆம் தேதி வரையிலான ஆட்சியை அதிமுகவினர் மறந்துவிட்டனரா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்று நாம் அரசு அமைக்கும் போது உச்சத்தில் இருந்தது.

ஆக்ஸிஜன் இல்லை, படுக்கை இல்லை என்ற நிலையே இருந்து வந்தது. ஆனால் இன்று கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தியுள்ளோம்.

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி

கொரோனா

கொரோனா

கொரோனாவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம். கொரோனோவின் மூன்றாவது அலையையும் கட்டுப்படுத்துவோம். கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காகத்தான் கடந்த ஆட்சியில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்தினோம்.

அனைத்து கட்சி

அனைத்து கட்சி

தற்போது கொரோனாவை தடுக்க அனைத்து கட்சிகளின் சார்பிலும் ஒவ்வொரு எம்எல்ஏக்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். இதில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரும் அடங்குவார். அவர்கள் அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவர்.

எடப்பாடி பதில்

எடப்பாடி பதில்

கடந்த ஆட்சியிடம் கொரோனா தொற்று குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட சொன்னேன்; ஏற்கவில்லை. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை போல பிப்.26 முதல் மே 6-ஆம் தேதி வரையிலான ஆட்சியை அதிமுகவினர் மறந்துவிட்டனரா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

அலட்சியம்

அலட்சியம்

மேலும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என அலட்சியமாக இருந்ததால்தான் கொரோனா தொற்று அதிகரித்தது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம் நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினேன். முதலமைச்சர் குறிப்பிட்டதை போல் அலட்சியமாக இல்லை என்றார்.

English summary
CM MK Stalin says about AIADMK government failure in Corona handling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X