சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேயாட்சியில் பிணந் தின்னும் சாத்திரங்கள்.. ஸ்டாலின் ஆவேசம்; தர்மம் புதையுண்டதாக தமிழிசை கோபம்

Google Oneindia Tamil News

சென்னை: அரூரில் 17 வயது மாணவி இரு இளைஞர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலினும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி அருகே சிட்லிங் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி. இவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றார்.

MK Stalin and Tamilisai condemns Dharmapuri student molested incident

அப்போது மலம் கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற இந்த சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் தர்மபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை!

இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்! பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? என்று தனது டுவிட்டரில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதுபோல் பலாத்கார சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் அரூர் அருகே மாணவி கழிப்பிடம் சென்றபோது பாலியல் துன்புறுத்தலுக்குப் பின் சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்த நிகழ்ச்சி கண்டனத்துக்குரியது.

தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும். வீடுதோறும் கழிப்பறை திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று தமிழிசை தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

English summary
DMK President MK Stalin and BJP State president Tamilisai Soundararajan condemns for Dharmapuri girl molested incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X