• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கவனிச்சீங்களா.. "முதல்வர்" ஸ்டாலின்.. இதான் நோக்கம்.. 200க்கு நிச்சயம்.. மிச்ச தொகுதியிலும் விறுவிறு

|

சென்னை: முன்பு மாதிரி இல்லை ஸ்டாலின்.. பிரச்சாரங்களில் ஒரு பக்கம் தெறிக்க விடுகிறார் என்றால், கூட்டணி கட்சிகளிடம் மாஸ் காட்டி வருகிறார்.. நாளுக்கு நாள் திமுக தலைவரின் தனித்தன்மை ஒவ்வொரு விஷயத்திலும் தெரிய ஆரம்பித்துள்ளது.

இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக உள்ளது.. அதற்காகவே கட்சிக்குள் பலருடைய எதிர்ப்பையும் மீறி பிரசாந்த் கிஷோர் டீமை திமுக உள்ளே இறக்க உள்ளது.

10 வருடம் கழித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், முதல்வர் பதவியில் உட்கார வேண்டும் என்றால், தங்களின் அனைத்து வியூகங்களுக்கும் ஒத்துழைப்பும், சம்மதமும் தர வேண்டும் என்று ஐபேக் திமுக தலைமையை கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

கூட்டணி கட்சிகள்

கூட்டணி கட்சிகள்

அதற்கேற்றபடி, இப்போதுவரை ஸ்டாலின் ஐபேக்கின் திட்டங்களின்படியும், வியூகங்களின்படியும்தான் செயல்பட்டு வருகிறார். அது ஒர்க் அவுட் ஆகியும் வருகிறது. அந்த ஐபேக்கின் ஒரு யோசனைதான், கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, பெரும்பாலான இடங்களில் திமுகவே போட்டியிட வேண்டும் என்பது..

உதயசூரியன்

உதயசூரியன்

அதற்காக கூட்டணிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இதனாலேயே கூட்டணி உறுதியும், இறுதியும் செய்யப்படாமல் இருந்த நிலையில், அனைத்தும் கனிந்து வரும் சூழல் உருவாகி உள்ளதாம். இதற்கு காரணமும் ஐபேக் & ஸ்டாலினின் சமயோஜித திட்டங்கள்தானாம். இதை பற்றி திமுக பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: "பொதுவாக, வியூகம் அமைப்பதற்காக டீமை எந்த கட்சி உள்ளே இறக்கினாலும், அந்த கட்சிக்கான வெற்றி மட்டுமே இதுவரை பார்க்கப்பட்டு வந்தது..

ஐபேக்

ஐபேக்

ஆனால் ஐபேக் இதில் சற்று வித்தியாசப்படுகிறது.. நிறைய மெனக்கெடுகிறது.. திமுகவுக்கு மட்டுமில்லாமல் கூட்டணி வெற்றிக்காகவும் முயற்சிக்கிறது.. கூட்டணி வென்றால், அது தலைமைக்குதான் பெருமை, பலம் என்பதால்தான் ஐபேக் டீம் கூட்டணி கட்சிகளிலும் கவனத்தை செலுத்தி வருகிறது. திமுக பெருவாரியான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதுதான்.. அதற்காகவே ஒரு சர்வே எடுக்கப்பட்டது..

திமுக

திமுக

அதில் 150 இடங்களில் திமுக அசால்ட்டாக வெற்றி பெறக்கூடிய இடங்களாக கணிக்கப்பட்டுள்ளது.. அந்த 150-ல் கண்டிப்பாக திமுக போட்டியிடும்.. அதேபோல, இழுபறியில் 40-முதல் 50 இடங்கள் உள்ளது.. இங்கு திமுகவுக்கு அவ்வளவாக வெற்றி பெற வாய்ப்பு இல்லை.. இதுபோன்ற வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் இடங்களைதான், கூட்டணிகளுக்கு கட்சி தலைமை ஒதுக்கும்.. ஆனால், இப்போது அப்படி இல்லை, அந்த சந்தேகத்துக்குரியது என்று சொல்லப்பட்ட 50 இடங்களிலும் திமுகவே களமிறங்க யோசித்து வருகிறது போலும்..

சமயோஜிதம்

சமயோஜிதம்

இதற்கு 2 காரணங்கள் இருக்கு.. இப்படி செய்வதால், எதிர்தரப்பை நேரடியாகவே சமாளிக்க முடியும், மற்றொன்று கூட்டணிகளை யாரும் தங்கள் கட்சிக்கு எளிதாக இழுத்துவிட முடியாது, விலைக்கும் வாங்கிவிட முடியாது என்பதால்தான், திமுகவே போட்டியிட முயற்சிப்பதாக தெரிகிறது. இதெல்லாம் கலைஞர் காலத்தில் இருந்து இதுவரை இல்லாத யுக்திகள்.

முதல்வர்

முதல்வர்

அதேபோல இவ்வளவு காலம் கூட்டணிகள் முரண்டு பிடித்து கொண்டிருந்த நிலையில், ஒவ்வொருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து வருகிறது.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை தருகிறோம் என்றும், தனிச்சின்னத்தில் போட்டியிட்டால் வேட்பாளர்களை தருகிறோம் என்ற இன்னொரு புது ஐடியாவையும் தருகிறதாம்.. எல்லாவற்றிற்கும் மேலாக, கூட்டணிகள் யாரையுமே விட்டுத்தந்துவிடக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதால், எல்லாமே விரைவில் "சுபம்" ஆகும் என்றும், ஸ்டாலினை "முதல்வர்" சீட்டில் உட்கார வைத்து பூரிப்பார்கள் என்றும் தெரிகிறது' என்றனர்.

 
 
 
English summary
MK Stalins Mass move in Seat allocation of Alliance Parties
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X