அன்று ஏமாற்றம்; இன்று மகிழ்ச்சி; அரசியல் பேலன்ஸ் செய்த ஜவாஹிருல்லா!
சென்னை: பிளாஸ்டிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிப்பதாக கூறியிருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.
ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை தொடர்பாக கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இவர் விடுத்த அறிக்கை தமிழக அரசு மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இருந்ததோடு ஏமாற்றம் தரும் வகையில் அரசின் முடிவுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
கூட்டணிக் கட்சியான திமுகவின் ஆட்சியில் எடுக்கப்பட்ட ஒரு முடிவுக்கு இவர் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
திமுக கூட்டணியிலிருந்து மெல்ல வெளியேறுகிறாரா ஜவாஹிருல்லா என விவாதங்கள் எல்லாம் நடத்தப்பட்ட சூழலில் இன்று அரசை பாராட்டி ஒரு அறிக்கை விடுத்திருக்கிறார். அதன் விவரம் பின்வருமாறு;

மகிழ்ச்சி
தமிழக அரசு சுற்றுச்சூழல் அக்கறையுடன் நெகிழியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்கான அரசாணை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன். நெகிழிக் கட்டுப்பாட்டில் நெகிழிக் குப்பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குக் கடிவாளம் போடுவதும் அதேநேரத்தில் மக்களுக்கு நெகிழி மற்றும் அதன் மாற்றுகள் குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதும் மிக அவசியம். இவை இரண்டும் தமிழக அரசின் அரசாணையில் கவனத்தில் கொள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பாராட்டு
நிறுவனங்களை தம் குப்பைகளுக்கு பொறுப்பாக்கும் "நீடித்த உற்பத்தியாளர் பொறுப்பு" குறித்தும் மீண்டும் மஞ்சப்பை என்கிற இயக்கத்தைப் பற்றியும் அரசாணை பிறப்பித்தது பொருத்தமான நடவடிக்கையாகும். மரபான இயற்கை சார்ந்த தீர்வை நோக்கி நகர்வதாக அரசாணை மேலும் குறிப்பிட்டு இருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

மறுசுழற்சி
சாலையோர வியாபாரிகள் பயன்படுத்தும் நெகிழிப் பொட்டலங்கள் போன்றவை தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில் பெருநிறுவனங்களின் நொறுக்குத்தீனிப் பொட்டலங்கள் போன்றவை இந்த அரசாணையில் தவிர்க்கப் பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. நெகிழி ஒழிப்பில் மறுசுழற்சி செய்யத்தக்க நெகிழியை மறுசுழற்சி செய்வதும் மற்றவற்றைத் தடைசெய்வதுமே 'நெகிழிக் கழிவில்லா தமிழகத்தை' உருவாக்கும்.

பிளாஸ்டிக்
நெகிழியை எரித்து அழிக்கும் சாம்பலாக்கிகள் மற்றும் பைராலிசிஸ் நிலையங்களை அமைப்பது மேலும் சுற்றுச்சூழலை பாதிக்கச் செய்யும் எனவே இத்திட்டங்களையும் முதற்கட்டத்திலேயே மக்களின் உடல்நலன் மற்றும் சூழல் நலன் அடிப்படையில் உடனே தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications