கமல் வச்ச 'குறி'.. ஒரே இரவில் 'ஓஹோ' ஆதரவு.. காற்று திசை மாறுகிறதா?
சென்னை: கமல்ஹாசனின் "உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா" என்ற வீடியோ, இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் ஒருவித 'கமர்ஷியல்' வரவேற்பைப் பெற்றுள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சந்திக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல்.. நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற 3.66 சதவிகித வாக்குகளை டபுள், ட்ரிபிள் ஆக்க வேண்டிய கட்டாயம்.. நகர்ப்புறங்களில் மட்டும் கமல்ஹாசனுக்கு வாய்ஸ் என்பதை தகர்க்க வேண்டிய கட்டாயம்.
எல்லாவற்றையும் விட, முதன் முதலாக அரசியலில் களம் காணும் தானும் வெற்றிப் பெற வேண்டிய கட்டாயம்.. இப்படி பல 'கட்டாயங்கள்' கமல்ஹாசனை சுற்றி நிற்கின்றன.

செம ரீச்
இந்த நிலையில் தான், கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று மநீம தொண்டர்கள் தாண்டி, பரவலாக பலரிடமும் ரீச் ஆகியுள்ளது. ஆம்! "உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா" என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தது. இதில், கமல்ஹாசன் ஆக்ரோஷமாக பேசியது மட்டுமின்றி, ஒருமையிலும் சில தலைவர்களை விமர்சித்திருந்தார். மகாத்மா காந்தியடிகள் சிலையின் கீழ் நின்று பேசுகிற அந்த வீடியோவில் கமல், "மேல இருந்து ஒருத்தரு என்ன மொழி பேசுறதுன்னு சொல்றாரு; என்ன சாப்பிடறதுன்னு சொல்றாரு; என்ன சிந்திக்கனும்னு சொல்றாரு; இந்த தேசத்தை எப்படி நேசிக்கனும்னு அவர் சொல்லி கொடுக்கிறாரு. யோவ்... உன்னோட ஊர் மேப்பில மேல இருக்கிறதால அதான் மேலிடம்னு நினைச்சுடாத நீ.. இங்கிருந்து பாரு.. இதுதான் தலைவாசல்.

ஒரே ஒருவழி
இப்படி கோவமாக இங்க இருந்து ஒரு ஆள் பேசுவாருன்னு பார்த்தா அங்க போய் இந்த ஆளு கையை கட்டிட்டு நிற்கிறாரு... இதுல சைரன் வேற.. இவங்க வாழ்க்கை ஒளிமயமாக இருக்கனும்... ஆனா நம்ம வாழ்க்கை? இந்த இருட்டுல இருந்து வெளிச்சத்துக்கு வரனும்னா ஒரே ஒருவழிதான் இருக்கு டார்ச்லைட்..." என்று இதுவரை இல்லாத அளவில் இறங்கி அடித்திருந்தார் கமல்.

மாஸ் ரிசல்ட்
கமல்ஹாசனை பாஜகவின் 'பி' டீம் என்று பலரும் விமர்சித்து வரும் சூழலில், நேரடியாகவே விமர்சித்து, 'தான் அப்படிப்பட்டவன் இல்லை' என்பதை சப்தமாக உணர்த்தும் நோக்கில் இந்த வீடியோவை வெளியிட்டதாகவே கூறப்படுகிறது. எது எப்படியோ.. எதை உணர்த்த வீடியோ வெளியிட்டாரோ! ஆனால், இதுவரை கமல்ஹாசன் எடுத்த பல முயற்சிகளை விட, இந்த வீடியோ கான்செப்ட், ஒரு வித மாஸ் 'அவுட்கம்' கொடுத்துள்ளது என்கின்றனர் மக்கள் நீதி மய்யத்தினர்.

வீடியோ ஹிட்
ஆம்! இந்த வீடியோவின் 'ஸ்க்ரிப்ட்' மிக நேர்த்தியாக, ஒருமுறைக்கு பல முறை யோசித்து எடுக்கப்பட்டது என்கின்றனர் மநீம 'ஐடி' விங் நிர்வாகிகள். வீடியோவில் கமல்ஹாசன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கூட, தீர ஆலோசிக்கப்பட்டு எழுதப்பட்டது என்றும், இறுதியில் கமல்ஹாசனின் ஃபைனல் எடிட்-க்கு பின் முழு ஸ்க்ரிப்ட்டும் உறுதி செய்யப்பட்டது என்கின்றனர். குறிப்பாக, வீடியோவின் கிளைமேக்சில், கமல்ஹாசனுக்கு பின்னால் இருந்து ஆயிரக்கணக்கானோர் 'டார்ச் லைட்' அடிப்பது போன்ற ஷாட் தான், கமர்ஷியல் ரீதியாக வீடியோவை ஹிட் அடிக்க வைத்தது என்றும் கூறியுள்ளனர்.

அதிகம் ரீ டிவீட்
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூட, டிவியை உடைப்பது போன்ற ஸ்க்ரிப்ட் எடுக்கப்பட்டது. ஆனால், அது மற்ற கட்சியினரிடையே பேசப்பட்டதே தவிர, மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே பெரிதாக இம்பேக்ட் ஏற்படுத்தவில்லை. ஆனால், இந்த வீடியோ ஒர்க் அவுட் ஆகிவிட்டது. குறிப்பாக, புதிய வாக்காளர்கள் பலரும் கமல்ஹாசனின் இந்த வீடியோவை அதிகம் ரீ டிவீட் செய்வதையும், ஷேர் செய்வதையும் நாங்கள் காண்கிறோம் என்று கூறுகின்றனர்.

எதிரொலிக்குமா?
இதன் மூலம், ஒரே நாளில் இளைஞர்கள் மத்தியிலும், புதிய வாக்காளர்கள் மத்தியிலும், இத்தனை நாட்கள் ஏற்படுத்தாத தாக்கத்தை மக்கள் நீதி மய்யம் ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தலில் இவை வாக்குகளாக எதிரொலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.