சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமல் போட்ட ஒத்த டிவீட்... டென்ஷனில் மொத்த கட்சிகளும்.. "இதுதான்டா கூட்டம்"..!

கமல்ஹாசன் பதிவிட்ட ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை, சென்ற இடமெல்லாம் மக்கள் வாழ்த்துகிறார்கள்.. ஏன் தெரியுமா? இதற்கான காரணத்தை கமலே தன்னுடைய ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

கட்சி ஆரம்பித்ததில் இருந்தே கமலின் ஒரே கொள்கை ஊழலுக்கு எதிரானதுதான்.. யார் லஞ்சம் ஊழலில் ஈடுபட்டாலும் டென்ஷன் ஆகிவிடுவார்.

அதேபோல, ஓட்டுக்கு பணம் என்பது கமலுக்கு ஒவ்வாத ஒன்று.. அப்படித்தான் பத்து பைசாகூட தராமல், நேர்மையான வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்றனர்.. ஓட்டுக்கு பணம் இல்லாவிட்டாலும், கமலின் இந்த அணுகுமுறை மக்களுக்கும் பிடித்திருந்தது.

நாங்கள் கையில் எடுத்திருப்பது மாற்று அரசியல்.. போர்க் குண அரசியல் அல்ல.. கமல்ஹாசன் விளக்கம்நாங்கள் கையில் எடுத்திருப்பது மாற்று அரசியல்.. போர்க் குண அரசியல் அல்ல.. கமல்ஹாசன் விளக்கம்

மய்யம்

மய்யம்

அதனால்தான் கடந்த முறை பெருவாரியான வாக்குகளை மய்யத்துக்கு தந்திருந்தனர்.. அப்போதுகூட கமல் பிரச்சாரத்தின்போது, "நான் பணம் தர மாட்டேன்... யாராவது ஓட்டுக்கு ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தால் வாங்காதீங்க.. 5 லட்சமாக கேளுங்க என்றார்.

 நிதி வசூல்

நிதி வசூல்

இந்த முறை மக்கள் நீதி மய்யம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது.. ஆனால், அந்த கட்சிக்கு செலவுக்கு பொதுமக்களிடம் இருந்து நிதி வசூல் செய்ய முடிவு செய்ததாகவும் சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வந்தன.. ஏனென்றால், மய்யத்தில் இருப்பவர்களில் பலரும் அரசியல் பின்புலம் இல்லாதவர்கள்... மக்கள்நலனுக்காக கட்சியில் இணைந்து பணியாற்றும் சாதாரண நடுத்தரகுடும்பத்தை சேர்ந்தவர்கள்.

 செலவுகள்

செலவுகள்

அதனால்தான், பிரச்சாரம் உட்பட சட்டப்பேரவை தேர்தலுக்கு செய்ய வேண்டிய செலவுகளுக்கு நிதி தேவைப்படும் என்பதாலும், தேர்தலுக்கு ஆகும் செலவுகளை சமாளிக்கவும் பொதுமக்களிடம் இருந்து நிதிவசூலிக்க முடிவு செய்யப்படுவதாக ஒரு காரணம் கசிந்தது. அதுமட்டுமல்ல, ஏற்கனவே பொதுமக்களிடம் இருந்து வசூலித்த பணத்தை வைத்து, கொரோனா காலத்தில் இவர்கள் ஆற்றிய பணி அளவில்லாதது என்பதையும் மறந்து விட முடியாது.

 புகைச்சல்

புகைச்சல்

இப்படிப்பட்ட சூழலில்தான் கமல் தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.. இவருக்கு செல்லும் இடமெல்லாம் நிறைய கூட்டம் கூடி வருகிறது.. இது எதிர்க்கட்சிகளுக்கு சற்று புகைச்சலையும் தந்து வருகிறது. தற்போது ஒரு கமல் போட்ட ட்வீட்தான் மேலும் பரபரப்பை கிளப்பி வருகிறது..

வாங்க

"இதுவரை ஓட்டுக்களை "வாங்க" வந்த அரசியல்வாதிகளைத்தான் பார்த்திருக்கிறோம். முதன் முதலில் ஓட்டு கேட்டு வந்தவர் நீங்கள்தான் என வாழ்த்துகிறார்கள் மக்கள். செல்லும் இடமெல்லாம் மாற்றத்தை விரும்பும் மக்கள் வெள்ளம் கரைபுரள்கிறது. நமது வாகனம் படகாகிறது" என்று பதிவிட்டுள்ளார்... உண்மையிலேயே கமல் சொல்வது போல அப்படி மக்கள் தெரிவித்திருந்தால், நிச்சயம் அது மய்யத்துக்கான வெற்றிதான்.. மாற்றத்துக்கான அறிகுறிதான் என்பதில் சந்தேகமில்லை.

English summary
MNM Leader Kamalhasans Tweet about his Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X