• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"என் ஓட்டை திரும்ப தாங்கடா".. கையில் பெரிய டார்ச் லைட்.. "எனக்கு ஓட்டு போடுங்க".. ஸ்ரீபிரியா கெத்து!

நடிகை ஸ்ரீபிரியா மயிலாப்பூரில் போட்டியிடுகிறார்
Google Oneindia Tamil News

சென்னை: "என் ஓட்டை திரும்ப தாங்கடா" என்று கொந்தளித்து போய் அன்று கேட்டவர்தான் நடிகை ஸ்ரீபிரியா.. இன்று அவரே "எனக்கு ஓட்டு போடுங்க" என்று கேட்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது பாராட்டத்தக்க வளர்ச்சிதான்..!

"என்ன, இவ்வளவு கெத்தா இருக்கிறாரே?" என்று பொதுவாக ஸ்ரீபிரியாவை பார்ப்பவர்கள், அல்லது அவர் பேச்சை கேட்பவர்கள் நினைப்பார்கள்.. இது இப்போது இல்லை.. அவர் சினிமாவில் நடித்து கொண்டிருந்த காலத்தில் இருந்தே அப்படித்தான் ஒரு எண்ணம் இருக்கிறது.

ஆனால், அது உண்மையில்லை.. ஸ்ரீபிரியாவுடன் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும் அவரது மென்மையான குணம்.. மிக சிறந்த அறிவாளி.. திறமைசாலி.. துணிச்சல்வாதி.. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்.. அதேசமயம் அபரிமிதமான ஹ்யூமர் சென்ஸ் உள்ளவர்.

"லிஸ்ட்டில்".. மொத்தம் 21 பேராம்.. ஸ்டாலின் இப்படி செய்யலாமா.. வெடித்து கிளம்பியது பிரச்சனை..!

பரபரப்பு

பரபரப்பு

இவர் அரசியலுக்கு வருவார் என்றெல்லாம் யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஆனால், அரசியல் கருத்துக்களை அடிக்கடி ட்வீட்டில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்திவிடுவார்.. அன்று சசிகலா - ஓபிஎஸ் அதிகார மோதல் பிரச்சனை ஏற்பட்டபோது, டக்கென ஒரு ட்வீட் போட்டார்.. அதில் "என் ஓட்டை திரும்பப் பெற முடியுமா?திரும்பத் தாங்கடா..!"என ஒரே வரியில் தமிழக அரசியல் நகர்வுகளுக்கு எதிரான கருத்தை ஸ்ரீபிரியா பதிவிடவும் மொத்த பேரும் அரண்டு போனார்கள்.

கருத்து

கருத்து

அரசியல் விவகாரம் என்றில்லை.. பொதுவான சமூக கருத்துக்களையும் நச்சென்று சொலிவிடுவார்.. "அதென்ன.. டிவயில் உட்கார்ந்து கொண்டு, அடுத்தவங்களின் குடும்பப் பிரச்சினைகளை நீதிபதிகள் மாதிரி, நடிகைகள் அலசுவது? இதெல்லாம் ஆரோக்கியமானதாக எனக்கு தெரியவில்லை" என்று ஓபன் டாக் தந்தவர்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

இதற்கு பிறகுதான் இவர் கமலின் கட்சியில் இணைந்தார்.. கமல் - ஸ்ரீபிரியா இருவரின் 40 வருட காலத்துக்கும் மேலான ஆழ்நட்புதான், இன்றளவும் தழைத்தோங்கி வருகிறது.. தன்னுடைய கட்சிக்கு இன்றளவும் விசுவாசமாக இருந்து வருகிறார் ஸ்ரீபிரியா.. ஒருமுறை, ரஜினியும் கமலும் இணையலாம் என்ற ஒரு பேச்சு எழுந்தபோதுகூட ரஜினி தனக்கு மிகவும் பிடித்தமான நண்பராக இருந்தாலும்கூட, "எங்கள் தலைவர் கமல்தான் முதல்வராக வரவேண்டும்" என்று துணிந்து சொன்னவர்..

நாகரீகம்

நாகரீகம்

இப்படித்தான் ஒருமுறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலினை பேசுவதைபோலவே கமலையும் அநாகரீகமான வார்த்தைகளால் பேசியிருந்தார்.. இதை கேட்டு மய்ய உறுப்பினர்கள் கொந்தளித்து விட்டனர்.. ட்விட்டரே ரணகளமாகிவிட்டது. உடனே ஸ்ரீபிரியா ஒத்த ட்வீட்டை போட்டு அத்தனை பேரையும் அடக்கினார்.

ட்வீட்

ட்வீட்

"சிறு பிள்ளைகளைக்கூட மரியாதையுடன் 'வாங்க' என்று அழைப்பது என் வழக்கம்... சிலர் குறிப்பாக ட்விட்டர் போன்றவற்றில் 'வா போ, வாடி போடீ' என்றெல்லாம் ஒருமையில் குறிப்பிடுவது நாகரீகமற்ற செயல். மாற்றிக்கொண்டால் சிறப்பாக இருக்கும்" என்று உரிமையாக கண்டித்தார்... இதை மய்ய உறுப்பினர்களும் அப்படியே ஏற்றுக் கொண்டு அமைதியானார்கள்.. இப்படி மய்யத்தின் வளர்ச்சி எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டு விடாமல் ஸ்ரீபிரியாவின் அணுகுமுறை இந்த 3 வருட காலமாக அமைந்து வருகிறது.

டார்ச் லைட்

இந்த முறை ஸ்ரீபிரியாவின் விசுவாசத்துக்கும், உழைப்புக்கும் கமல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளார்.. மயிலாப்பூர் தொகுதியில் ஸ்ரீபிரியா போட்டியிடுகிறார்.. கமல்தான் இங்கு போட்டியிடுவதாக சொல்லப்பட்டடது.. ஆனால், அந்த வாய்ப்பு ஸ்ரீபிரியாவுக்கு சென்றுள்ளது.. இந்த வேட்பாளர் அறிவிப்பினை அடுத்து ஸ்ரீப்ரியா ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், தங்கள் கட்சி சின்னமான டார்ச் லைட்டை கையில் பிடித்து கொண்டு, கெத்தாக போஸ் தருகிறார்..

 மயிலாப்பூர் தெரு

மயிலாப்பூர் தெரு

"நம் வரும்கால மக்கள் நீதி மய்யம் ஆட்சியின் சபாநாயகர் திருமதி ஸ்ரீப்ரியா அவர்களுக்கு எங்களின் பாராட்டுகள் வாழ்த்துக்கள்.. மயிலாப்பூர் எம்எல்ஏவுக்கு வாழ்த்துக்கள்" என்று கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.. அதுமட்டுமல்ல, மயிலாப்பூர் தொகுதிக்குள் வாக்குகளை பெறவும் வீதி வீதியாக இறங்கிவிட்டார்.. அங்குள்ள ஒரு தெருவில் டக்கென டீக்கடைக்குள் நுழைந்து ஹாயாக டீ சாப்பிட்டுக் கொண்டும், பொதுமக்களிடம் சகஜமாக பேசிக் கொண்டும் வாக்குகளை சேகரித்து வருகிறார்.. இதனால், மயிலாப்பூர் வீதிகளில் ஸ்ரீபிரியாவின் வருகைக்கு ஏகமவுசு கூடிக் கொண்டே போகிறது..

English summary
MNM Sripriya contest from Mylapore Constitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X