சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பருவமழை காலம்- கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்குமா? இன்னும் உச்சகட்டமாக பரப்புமா?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் உச்சகட்டமாக பரவி வரும் நிலையில் பருவமழை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பது குறித்து மருத்துவர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

கொரோனா பரவ தொடங்கிய போது ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. அதாவது உச்சகட்ட வெயிலை கொரோனா வைரஸால் தாங்க முடியாது;அதன் வீரியம் குறைந்து தாக்கம் இல்லாமல் இருக்கும் என்பதுதான் அது.

ஆனால் வெயிலுக்கும் கொரோனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த கோடை காலத்தில்தான் கொரோனா வைரஸ் நமது நாட்டை பேரழிவில் தள்ளிவிட்டிருக்கிறது.

 உங்க உடம்புல வைட்டமின் டி நல்லா ரிச்சா இருக்கா.. அப்ப கொரோனா ஆபத்து குறைவே.. ஆய்வாளர்கள் உங்க உடம்புல வைட்டமின் டி நல்லா ரிச்சா இருக்கா.. அப்ப கொரோனா ஆபத்து குறைவே.. ஆய்வாளர்கள்

பருவ மழை நோய்கள்

பருவ மழை நோய்கள்

இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. தற்போது உச்சத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் தாக்கமானது பருவமழை காலத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவ உலகம் ஆராய்ந்து வருகிறது. பொதுவாக மழை காலத்தில் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற மழைகால நோய்கள் ஏற்படும்.

மழையால் இயல்பான லாக்டவுன்

மழையால் இயல்பான லாக்டவுன்

கொசுக்கள் அதிக அளவு உற்பத்தியாவதால் இத்தகைய நோய்கள் உருவாவது வழக்கம். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள், மருந்துகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இதே கால கட்டத்தில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். பொதுவாக மழைக்காலம் என்பது பொது இடங்களில் மக்கள் கூடுவதை குறைக்கக் கூடியது. மக்களை வீடுகளிலேயே முடங்க வைக்கக் கூடியது. கிட்டத்தட்ட ஒரு லாக்டவுனைப் போன்ற சூழ்நிலையை மழை காலம் உருவாக்கும்.

மருத்துவ உலக நம்பிக்கை

மருத்துவ உலக நம்பிக்கை

கொரோனா வைரஸானது பொது இடங்களில் ஒன்று கூடுவதால் அதிகம் பரவுகிறது எனில் இந்த மழைக்காலம் அதை தடுக்கும் எனலாம். அதேபோல் பொது இடங்களில் எச்சில் துப்பினால் பரவும் எனில் அதையும் கூட மழைநீர் அடித்துச் சென்றுவிடும். இப்படியான பல்வேறு மழை காரணிகள், கொரோனா பரவுவதை தடுக்கும் என்கிற நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறது.

பேரழிவுக்கும் காரணமாகலாம்

பேரழிவுக்கும் காரணமாகலாம்

இருப்பினும் வெயிலுக்கே வேகாமல் போன கொரோனா, மழைக்காலத்திலும் உக்கிரத்தைக் காட்டினால் நிலைமை மோசமாகிவிடும் என்பதும் மருத்துவர்கள் அச்சம். ஏனெனில் மழைகால நோய்கள் தாக்குதல்களுடன் கொரோனா தாக்குதலும் இணைந்து கொண்டால் பேராபத்தாகும் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.

English summary
A new discussion over the monsoon rain will impact coronavirus spread or not.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X