'மா.சு.வின் சலிக்காத கால்களுக்கு என் முத்தங்கள்..' அமைச்சரை பாராட்டி தள்ளிய நாஞ்சில் சம்பத்
சென்னை: காட்டு வழியில் சுமார் 15 கிலோமீட்டர் நடந்தே சென்று மலைவாழ் மக்களின் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை பாராட்டித் தள்ளியுள்ளார் மூத்த அரசியல் தலைவர் நாஞ்சில் சம்பத்!
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள பல மலைக்கிராமங்களை ஆய்வு செய்தார்.
மேலும், அப்பகுதி மக்களுக்குத் தேவையான உதவி பொருட்களை வழங்கிய அமைச்சர், இரவு கிருஷ்ணகிரியில் கோட்டையூர் கொல்லை என்ற மலைக் கிராம ஊராட்சி நடுநிலைப் பள்ளியிலேயே தங்கினார்.
|
15 கிலோமீட்டர்
அதன் பிறகு காலையில் மூக்கனாங்கிரி என்ற மலைக்கிராமத்தை ஆய்வு செய்த அமைச்சர் மா மா.சுப்பிரமணியன், அங்கு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், அங்கிருந்து சுமார் 15 கிலோமீட்ட் தூரத்தில் அமைந்துள்ள கடமகுட்டை மலைக் கிராமத்திற்கு விறுவிவென நடக்கத் தொடங்கிவிட்டார். அமைச்சரே நடக்கத் தொடங்கியதால், அவருடன் கலெக்டர் தொடங்கி அரசு பரிவாரிங்கள் அனைத்தும் அப்படியே நடக்கத் தொடங்கின.

ட்விட்டர் டிரெண்டிங்
வழிநெடுக மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் மா.சு அனைத்து பிரச்சினைகளும் விரைவில் சரி செய்யப்படும் என உறுதியளித்தார். தனது இரண்டு கால்களையும் இழந்த கோட்டங்கரை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், செயற்கை கால்களை அமைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தார். விரைவில் செயற்கை கால்கள் அமைக்க உதவுவதாக அமைச்சர் உறுதி அளித்தார். அமைச்சரின் மலை பயணம் தான் நேற்று ட்விட்டர் டிரெண்டிங்!

சலிக்காத கால்களுக்கு என் முத்தங்கள்
இந்நிலையில், காட்டு வழியில் சுமார் 15 கிலோமீட்டர் நடந்தே சென்று மலைவாழ் மக்களின் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சரை மூத்த அரசியல் தலைவர் நாஞ்சில் சம்பத் பாராட்டித் தள்ளியுள்ளார். இது குறித்து நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டரில், "மா.சு.வின் கால்கள் மான்களின் கால்கள். அடர்ந்த வனப்பகுதியில் உயர்ந்த மலையின் உச்சியில் பதினைந்து கிலோமீட்டர் நடந்து மக்கள் குறைகேட்ட அமைச்சர் மா.சு.வின் சலிக்காத கால்களுக்கு என் முத்தங்கள்..." எனப் பதிவிட்டுள்ளார்.

மருத்துவ ஆம்புலன்ஸ்
அதேபோல அங்குள்ள காமகிரி கிராம மக்கள், மருத்துவச் சிகிச்சைக்கு 15 கிலோமீட்டர் செல்ல வேண்டியுள்ளதால், தங்கள் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். கொடகரை, காமகிரி கிராமங்களுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படும் என்று உறுதி அளித்த அமைச்சர் மா.சு, மருத்துவச் சிகிச்சைக்குப் பல கிமீ செல்வதை தவிர்க்கும் வகையில் அரசு துணை சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உத்தரவாதம் தந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications