சுதந்திர தினக் கொண்டாட்டம்.. கனிமொழி வீட்டில் தேசியக் கொடி
சென்னை: சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, திமுக எம்பி கனிமொழி வீட்டில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
75 ஆவது சுதந்திர தினம் வரும் நாளை மறுநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 75வது ஆண்டு என்பதால் இந்த விழா கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு சுதந்திர தினம் ஆசாதி கா அம்ரித் மகா உத்சவ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு வீடுதோறும் மூவர்ணக் கொடி என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது. அதாவது பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ அல்லது மொட்டை மாடியிலோ இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசியக் கொடி விற்பனை அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
அது போல் சமூகவலைதளங்களின் முகப்பில் தேசியக் கொடியை அனைவரும் டிபியாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைதளங்களில் டிபியாக வைத்தனர்.
இதனிடையே தமிழக பாஜக சார்பாக மக்கள் மத்தியில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களை தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என வலியுறுத்துமாறு தமிழக பாஜக சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது.
தொடர்ந்து திமுகவினர் தேசியக்கொடியுடன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தையும் டிபியாக வைத்துள்ளனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி கூறுகையில், தேசியக் கொடியை ஏற்றுமாறு யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இது தேசப்பற்று சார்ந்த விஷயம். அவரவரே இதை செய்வார்கள். நான் என் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றுவேனா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி வீட்டில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் தேசியக் கொடியை டிபியாக வைத்து வருகின்றனர். அதேபோல் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications