பலத்த எதிர்ப்பு.. நெல்சன் மண்டேலா சிறை சாவி ஏலம் விடுவது நிறுத்தி வைப்பு!
சென்னை: நெல்சன் மண்டேலா இருந்த சிறையின் சாவி ஏலம் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா. ஆங்கிலேய அரசை எதிர்த்ததால், 18 ஆண்டுகள் அவர் ரோபன் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தற்போது அந்த சிறைச்சாலையின் சாவி ஜனவரி 28ம் தேதி ஏலம் விடப்படும் என்று அமெரிக்க ஏல நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த ஏலம் ஜனவரி 2022-ல் நியூயார்க் நகரத்தில் கர்ன்சேஸ் என்கிற ஏல நிறுவனத்தால் நடத்தப்பட உள்ளது. கிறிஸ்டோ பிராண்ட் என்பவர்தான் மண்டேலாவின் சிறைக்காவலராக இருந்தார். அவர்தான் இந்த சாவியை ஏலம் விட உள்ளார்.
நிதி திரட்டவே இந்த ஏலம் நடத்தப்பட இருப்பதாக ஏலம்விடும் நிறுவனம் தெரிவித்தது. திரட்டப்படும் நிதியிலிருந்து மண்டேலா அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றி ஒரு நினைவுத் தோட்டம் மற்றும் அருங்காட்சியகம் எழுப்ப உள்ளதாகவும் இந்நிறுவனம் கூறுகிறது.

நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை மட்டும் ஏலத்தில் விடப் போவதில்லை. அதோடு அவரே கைப்பட வரைந்த 'தி லைட் ஹவுஸ்' என்கிற ஓவியம், சிறையில் உடல் நலனுக்காக அவர் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட உடற்பயிற்சி சைக்கிள், டென்னில் ராக்கெட் போன்றவையும் ஏலத்தில் விடப்பட உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
இதற்கு தென்னாப்பிரிக்க கலாசார அமைச்சரான நாதி தெத்வா, தங்கள் அரசோடு இது குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று கூறினார். மேலும் "இந்த சாவி தென்னாப்பிரிக்க மக்களுக்குச் சொந்தமானது. அது யாருக்கும் சொந்தமான சொத்து அல்ல" என்று அமைச்சர் கூறினார்.
இதையடுத்து இந்த ஏலத்தை நிறுத்துமாறு தென் ஆப்பிரிக்க அரசு சார்பில் அமெரிக்க ஏல நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டது. இது சமூக வலை தளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மண்டேலா தென்னாப்பிரிக்காவை விட்டுச் சென்றது எப்படி என கேள்வி எழுந்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை ஏலம் நிறுத்தப்படுவதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு தென்ஆப்பிரிக்கா வரவேற்றிருக்கிறது. மண்டேலா இருந்த சிறைச்சாலை சாவி, தென்னாப்பிரிக்காவின் வலிமிகுந்த வரலாற்றைக் குறிக்கிறது. அந்த சாவி தென் ஆப்பிரிக்கர்களின் சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டம் குறித்த தற்போதைய ஆதாரம். அது தென்ஆப்பிரிக்கா மக்களுக்கு சொந்தமானது. எனவே அதை உரிமையுடன் எங்கள் நாட்டிற்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications