சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த ‘ஷாக்’.. புதிய மின் இணைப்பு கட்டணமும் ‘டபுள்’ ஆனது! யார் யாருக்கு எவ்வளவு? விரிவான ‘லிஸ்ட்’

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ள நிலையில், புதிய மின் இணைப்புக்கான கட்டணம் மற்றும் சேவைக் கட்டணமும் இரு மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 10ம் தேதி முதல் மின் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுகவின் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பொதுமக்களும் மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் மற்றும் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளன.

கசியவே கூடாது.. ஸ்டாலின் போட்ட கசியவே கூடாது.. ஸ்டாலின் போட்ட

இரு மடங்கான கட்டணம்

இரு மடங்கான கட்டணம்

அத்துடன் மீட்டர் காப்பீட்டுக்கான கட்டணம், பதிவு கட்டணம், வளர்ச்சி கட்டணம் போன்றவற்றையும் தமிழ்நாடு அரசு உயர்த்தி இருக்கிறது. மின் கம்பங்கள் மூலமாக கிடைக்கும் மின் இணைப்பு மற்றும் தரைக்கு அடியில் கேபிள் மூலமாக வழங்கப்படும் மின் விநியோகத்தை அடிப்படையாக கொண்டு இருமடங்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன.

மின்கம்ப விநியோகம்

மின்கம்ப விநியோகம்

மின் கம்பங்கள் மூலமாக மின் விநியோகிக்கப்படும் இடங்களில் மீட்டர் காப்பீட்டு கட்டணம் ரூ.600 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.750-ம் ஆகவும், இணைப்புக் கட்டணம் ரூ.500 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1000-ம் ஆகவும், பதிவு கட்டணம் ரூ.100 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.200-ம் ஆகவும், வளர்ச்சி கட்டணம் ரூ.1,400 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.2,800-ம் ஆகவும், வைப்புத் தொகை ரூ.200 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.300-ம் ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

நிலத்தடி மின் விநியோகம்

நிலத்தடி மின் விநியோகம்

அதேபோல், நிலத்தடியில் கேபிள் மூலம் மின் விநியோகிக்கப்படும் இடங்களில் மீட்டர் காப்பீட்டு கட்டணம் ரூ.600 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.750-ம் ஆகவும், இணைப்புக் கட்டணம் ரூ.500 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1000-ம் ஆகவும், ஒருமுனை மின் இணைப்பு பதிவு கட்டணம் ரூ.100 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.200-ம் ஆகவும், வளர்ச்சி கட்டணம் ரூ.5,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.7,000-ம் ஆகவும், வைப்புத் தொகை ரூ.200 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.300-ம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மின் மீட்டர்

மின் மீட்டர்

ஸ்மார்ட் மீட்டர் வைத்ததும் ஒருமுனை மின் இணைப்புக்கான மீட்டர் வைப்புத் தொகை ரூ.5,200 ஆகவும், மும்முனை மின் இணைப்புக்கான கட்டணம் ரூ.7,100 கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீட்டின் மின் இணைப்பின் பெயரை மாற்றுவதற்கான கட்டணம் ரூ.300 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.600-ம் ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மீட்டரை மாற்றும் கட்டணம்

மீட்டரை மாற்றும் கட்டணம்

பழுதான மீட்டரை மாற்றுவதற்கான கட்டணம் ஒருமுனை மின் இணைப்புக்கு ரூ.500 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1,000-ம் ஆகவும், மும்முனை மின் இணைப்புக்கு கட்டணம் ரூ.750 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1500-ம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒருமுனை மின் இணைப்புக்கான மீட்டரை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான கட்டணம் ரூ.500 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1,000-ம் ஆகவும், மும்முனை மின் இணைப்புக்கு கட்டணம் ரூ.750 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1500-ம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

English summary
After Electricity chargers New Electricity connection and service charges also increased in Tamilnadu amid Opposition parties and People are condemning the hike of electricity charges
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X