வருமான வரி புதிய ரூல்ஸ்.. சொத்து வாங்குவோருக்கு குட்நியூஸ்.. பான் எண் எதற்கெல்லாம் இனி கட்டாயம்
சென்னை: புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வர உள்ளது. எனவே வரைவு வருமானவரி விதிமுறைகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் வாங்க பான் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல்ரூ.10 லட்சத்துக்கு உட்பட்ட வங்கி பரிமாற்றத்துக்கு 'பான்' எண் குறிப்பிட தேவையில்லை. எனினும் நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பான் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ந் தேதி நிதியாண்டு தொடங்கும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள வருமானவரி சட்டம் 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதை தற்காலத்துக்கு ஏற்ப எளிமைப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு புதிய வருமானவரி மசோதா-2025 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு வருமானவரி விதிமுறைகளை பொதுமக்கள் கருத்துக்கேட்புக்காக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. பொதுமக்கள் கருத்துகளை பரிசீலித்த பிறகு மார்ச் மாத முதல் வாரத்தில் இறுதியான வருமான வரி விதிமுறைகளை வெளியிடப்பட உள்ளது.
புதிய வருமான வரி சட்டம்
அதன்பிறகு இந்த புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதற்கான வருமான வரி வரைவு விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டிருக்கிறது. இதில் வருமான வரி சட்டத்தில் தற்போதுள்ள 511 விதிகள் 333 ஆகவும், 399 படிவங்கள் 190 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து பங்குதாரர்களுடன் ஆலோசித்த பிறகு மார்ச் முதல் வாரத்திற்குள் புதிய வருமான வரி விதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி விதிமுறைகள்
அதில், வருமான வரி விதி 2026ன் முக்கிய அம்சங்கள் :- தற்போது, ஒரே நாளில் வங்கிக்கணக்கில் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக செலுத்துவதற்கோ, எடுப்பதற்கோ 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயமாக உள்ளது. வரைவு விதிமுறைகளில் அந்த உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது
10 லட்சம் பணப்பரிமாற்றம்
அதன்படி, ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக்கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் மொத்தம் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை பரிமாற்றம் செய்தால், 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கு உட்பட்ட தொகை பரிமாற்றத்துக்கு 'பான்' எண் இனி குறிப்பிட தேவையில்லை.
கார் வாங்க பான் கட்டாயம்
கார், இருசக்கர வாகனம் தற்போது, எந்த தொகைக்கு கார் வாங்கினாலும் 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் வாங்க குறிப்பிட தேவையில்லை. வரைவு விதிமுறைகளின்படி, ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புக்கு காரோ அல்லது இருசக்கர வாகனங்களோ வாங்கினால் 'பான்' எண் குறிப்பிட வேண்டியது அவசியம் ஆகும்.
அசையா சொத்து வாங்குவோருக்கு குட்நியூஸ்
ஓட்டல் பில்தொகை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், 'பான்' எண் குறிப்பிட வேண்டியதாக முன்பு இருந்தது. அந்த தொகை தற்போது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அசையா சொத்துகள் வாங்க, விற்க, பரிசளிக்க 'பான்' எண் குறிப்பிடுவதற்கான தொகை ரூ.10 லட்சத்தில் இருந்தது.இனி அசையா சொத்துகள் அசையா சொத்துகள் வாங்க, விற்க, பான் என் குறிப்பிடுவதற்கான உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
காப்பீடுக்கு பான் எண் கட்டாயம்
இப்போது ஓராண்டில் காப்பீட்டு பிரீமியம் மொத்த தொகை ரூ.50 ஆயிரமாக இருந்தால் மட்டுமே 'பான்' எண் குறிப்பிட வேண்டி இருந்தது. இனிமேல், கணக்கு அடிப்படையில் காப்பீட்டு நிறுவனத்திடம் பாலிசி எடுக்க 'பான்' எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகைப்படி மின்னணு பணம் செலுத்தும் முறைகளில் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. கிரிப்டோ கரன்சி பரிமாற்றம் குறித்த தகவல்கள், வருமானவரித்துறைக்கு தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகைப்படி
வீட்டு வாடகைப்படி கோருவதற்கான கேட்டகிரி-1 பெருநகரங்கள் பட்டியலில் பெங்களூரு, புனே, அகமதாபாத், ஐதராபாத் ஆகிய நகரங்களை வருமான வரித்துறை சேர்த்துள்ளது. இப்படி பல்வேறு அம்சங்கள் புதிய வருமான வரி சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. வரைவு விதிகள் குறித்து மக்களின் கருத்துக்கு பிறகு இறுதியான விதிமுறை அடுத்த மாதம் வெளியாகும். ஏப்ரல் 1 முதல் அப்படியே அவை அமலுக்கு வரும்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications