அதிமுகவில் புதிய கட்சி! சஸ்பென்ஸ் வைத்தாரே எடப்பாடி பழனிசாமி! அந்த கட்சி இணைந்துவிட்டதாமே! 6 சீட்டா?
சென்னை: அதிமுக கூட்டணியில் புதிய கட்சி இணைகிறது என அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தாரே அந்த புதிய கட்சி தற்போது இணைந்துவிட்டதே! அக்கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் வர இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக கூட்டணியை தவிர அதிமுக கூட்டணி இன்னும் ஒரு முழுமையான வடிவம் பெறவில்லை என்றே சொல்லலாம்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிதான் தவெகவில் இணையும் என பேசப்பட்டு வந்தது. ஆனால் அண்மையில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆயத்த கூட்டத்தில் தவெகவுடன் கூட்டணிக்கு போவது தற்கொலை முடிவுக்கு சமம் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனராம்.
மேலும் திமுகவுடன் கூட்டணி என்பதே சரியானது என்றும் கூறப்பட்டதால் கட்சி தலைமையும் அந்த முடிவையே எடுத்துள்ளதாம். அதாவது தொகுதி பங்கீட்டில் ஏதாவது நிறை குறை இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
எனவே திமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லாமல் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் சிறிய கட்சிகளே கூட்டணியில் இருக்கின்றன. அது போல் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, கூட்டணியில் இணைந்துள்ளது.
ஆனால் ராமதாஸோ தங்களதுதான் உண்மையான பாமக என கூறி வருகிறார். மேலும் கூட்டணி குறித்து பேச தனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளார். எனவே பாமக கூட்டணியில் இருப்பது எந்தளவுக்கு அதிமுகவுக்கு பலனை தரும் என தெரியவில்லை.
அது போல் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பிரேமலதா, தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாட்டை பிறகு அறிவிப்பதாக தெரிவித்துவிட்டார். எனவே தற்போது வரை அதிமுக கூட்டணியில் பாஜகவை தவிர வேறு வலிமையான கட்சி ஏதும் இல்லை.
இந்த நிலையில் அண்மையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, "அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். அதிமுக தலைமை வேட்பாளராக நியமிக்கப்படும் யாரும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடியதாக இருப்பார்கள்.
இது, தேர்தல் முன் கூட்டணி மாற்றங்கள் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் மேலும் ஊட்டியுள்ளது. அத்துடன் விரைவில் அதிமுக கூட்டணியில் ஒரு புதிய கட்சி இணையப்போகிறது என அறிவித்திருந்தார். ஆனால் அந்த கட்சி எது என அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் தனியரசு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதனால் அதிமுக கூட்டணியில் தனியரசுவின் கட்சி இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ கூட்டணியில் இணையவில்லை என தெளிவுப்படுத்திவிட்டார்.
இந்த நிலையில் இந்திய ஜனநாயக கட்சி, தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது என்டிஏ கூட்டணியிலேயே தாங்கள் தொடர்வதாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் அறிவித்தார்.
அது போல் ஜனவரி 23 ஆம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்தில் தங்களுக்கு அழைப்பு வரும் என தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவிடம் 6 சீட்கள் வரை கேட்டுள்ளதாகவும் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். ஆனால் 6 சீட்டுகளை எடப்பாடி பழனிசாமி கொடுப்பாரா என்பது சந்தேகம். ஓரிரு சீட்டுகளை கொடுத்தாலே அக்கட்சி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டியுள்ளது. அப்படியிருக்கும் போது 6 தொகுதிகள் என்பது கேள்விக்குறியே!
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications