டிஎன்பிஎஸ்சி அடிச்ச அப்பாயின்மெண்ட் ஆர்டர்.. ஸ்கோர் செய்யும் ஸ்டாலின்.. 9,801 பேர் நாளை பணி நியமனம்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு குளறுபடி காரணமாக அண்மையில் ரத்து செய்யப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் இந்த சர்ச்சைகளை ஓவர்டேக் செய்யும் வகையில் அதிரடி பிளானை கையில் எடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு நாளை பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
கடந்த 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு குளறுபடிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். குரூப் 2 தேர்வுகளில் நடந்த குளறுபடிகள் காரணமாக கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்களை வழங்குகிறார்.

டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல் அரசின் பணிகளில் தொய்வு ஏற்படாத வண்ணம், காலி பணியிடங்கள் அவ்வப்போது தமிழ்நாட்டின் அனைத்து தெரிவு முகமைகள் மற்றும் வாரியங்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. படித்த, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பினைப் பெற்று தரும் பணிகள் தமிழ்நாடு அரசால் தொடர்ந்து செவ்வனே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், மாநில மற்றும் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
9, 801 பேருக்கு பணி நியமன ஆணை
அந்த வகையில், திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளை நனவாக்கும் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக நாளை (பிப்ரவரி 13) சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள விழாவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9, 801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார்.
செனாய் நகரில் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம்
மேலும், செனாய் நகரில் ரூ.62.50 கோடி மதிப்பீட்டில் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் "எளிமை ஆளுமை" திட்டத்தில் கூடுதலாக எளிமைப்படுத்தப்பட்ட 50 சேவைகள் அறிமுகமும், அதைத் தொடர்ந்து, சென்னை செனாய் நகரில் ரூ.62 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 500 தேர்வர்கள் தங்கிப் பயிலக் கூடிய வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, "எளிமை ஆளுமை" முன்முயற்சியின் முதல் கட்டமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 முக்கிய சேவைகள் நெறிப்படுத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது மேலும் கூடுதலாக எளிமைப்படுத்தப்பட்ட 50 சேவைகளை முதல்வர் அறிமுகப்படுத்துகிறார்.
"தேர்வுக்களம்” கைபேசி செயலி அறிமுகம்
தமிழ்நாடு அரசினால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது, நுழைவுச் சீட்டு, பாடத்திட்டங்கள் பதிவிறக்கம், மாதிரி வினாத்தாள்கள் என அனைத்து விதமான நடைமுறைகளையும் கைபேசியிலேயே எளிதாகக் கையாளும் விதமாக "தேர்வுக்களம்" என்னும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் மத்திய அரசின் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விவரங்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கட்டணமின்றி பயின்றிட பயிற்சிகள் வழங்கும் இணையதளம்
அரசு ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, திட்டமேலாண்மை, தொடர்பாடல் உள்ளிட்ட திறன்களை மேம்படுத்திக் கொள்ள கட்டணமின்றி பயின்றிட பயிற்சிகள் வழங்கும் இணைய தளத்தை (Web Portal)தொடங்கி வைத்து, அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியின் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு அக்கல்லூரியின் வளாகத்திலேயே ரூ. 3 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் மூன்று அடுக்ககத்தில் எட்டு குடியிருப்புகள் கொண்ட கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியானது, தமிழ்நாட்டைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான அரசின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், வேலைவாய்ப்பு முன்னேற்றத்தின் முன்னணி மாநிலமாகவும் தமிழ்நாட்டை உருவாக்கும் இலக்குடன், இளைஞர்களின் எதிர்காலத்திற்கான உறுதியான படியாக அமைவதுடன், தமிழ்நாடு அரசின் "வெல்வோம் ஒன்றாக" என்ற தாரக மந்திரத்துடன் இளைஞர்களின் வாழ்வினை உயர்த்துவதற்கான நிகழ்வாகும். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர்,அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
-
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications