மாண்டஸ் போனால் என்ன? அடுத்த 3 மணி நேரம்.. இத்தனை மாவட்டங்ளில் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நள்ளிரவு கரையை கடந்த நிலையில் அடுத்த 3 மணி நேரம் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட, மேற்கு மாவட்டங்கள்

வட, மேற்கு மாவட்டங்கள்

அதேபோல் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய வட மாவட்டங்களிலும், நாமக்கல், கரூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மேற்கு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டெல்டா, தெற்கு மாவட்டங்கள்

டெல்டா, தெற்கு மாவட்டங்கள்

அதேபோல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மத்திய மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலை மையம் தகவல்

வானிலை மையம் தகவல்

இன்று மதியம் சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலில், "இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

நாளை வானிலை நிலவரம்

நாளை வானிலை நிலவரம்

நாளை (11.12.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அடுத்த 3 நாட்கள்

அடுத்த 3 நாட்கள்

12.12.2022 மற்றும் 13.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+