சென்னையில் லிஸ்ட் போட்டு பாஜகவே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தாக்கிய நிர்மலா சீதாராமனின் கணவர்!
சென்னை: சென்னையில் புள்ளி விவரத்துடன், பாஜக குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார் நிர்மலா சீதாராமனின் கணவரும் பிரபல அரசியல் பொருளாதார நிபுணருமான பரகால பிரபாகர்.. என்ன பேசினார் என்பதை பார்ப்போம்.
சென்னை சிந்தனையாளர் மன்றம் ஏற்பாடு செய்த தேசிய அளவில் நிலவும் அரசியல் சூழல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, முத்தமிழ் பேரவையின் கலைஞர் மன்றத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பரகலா பிரபாகர், மூத்த பத்திரிகையார் இந்து என்.ராம், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

"The values at stake" என்ற தலைப்பில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசிய பரகலா பிரபாகர், "இந்தியாவில், 20 மற்றும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே. வேலையின்மை விகிதம் 40% ஆக உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 60-65% படித்தவர்கள் வேலையில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்றார்.
உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி பேசிய பரகலா பிரபாகர். பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது கூட, இந்தியாவில் சமத்துவமின்மை வரலாற்று உச்சத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட 1% இந்தியர்கள் தேசிய வருமானத்தில் 22 சதவீதத்தை சம்பாதிக்கிறார்கள்.. 1% பேர் மொத்த தேசிய சொத்துக்களில் 44 சதவீதத்தை வைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் சமத்துவமின்மை மிகவும் அதிகரித்துவிட்டது, நாட்டிலும் பணவீக்கமும் அதிகரித்துவிட்டது.
காய்கறிகள் (27%), பருப்பு வகைகள் (19.5%), தானியங்கள் (7.8%), மசாலாப் பொருட்கள் (16.4%), பால் (4.6%), மற்றும் சர்க்கரை (7.5%) மற்றும் வீட்டுக் கடன் (40%) போன்ற பல்வேறு பொருட்களின் பணவீக்கம் வரலாற்று உச்சசத்தில் இருக்கிறது. ஆனால் மக்களின் குடும்ப சேமிப்பு 5% வரை குறைவாகவே உள்ளது. ரிசர்வ் வங்கி கையிருப்பைக் குறைத்து, பொதுச் சொத்துக்களை விற்றாலும், 2023ம் ஆண்டு நிலவரப்படி தேசத்தின் கடன் 160 லட்சம் கோடியாக இருந்தது.
நாட்டில் கார்ப்பரேட்களுக்கு வரி குறைப்பு, உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை மற்றும் ₹25 லட்சம் கோடி மதிப்பிலான கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்த போதிலும், உள்நாட்டு முதலீட்டு விகிதம் 30% லிருந்து 19% ஆக குறைந்துள்ளது. நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைகள் மற்றும் தேர்தல் பத்திரங்கள் வடிவில் பாஜக பெற்ற நன்கொடைகளில் வந்திருக்கிறது.
மூன்று விவசாயச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்ட நிலையில். விவசாயிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அவை திரும்பப் பெறப்பட்டது. உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்று கூறிக்கொள்ளும் பாஜக, இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மத சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு மத்திய அரசிலும் சரி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் சரி, அமைச்சரவையில் இடமளிக்கவில்லை" என்றார்.
இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் பேசுகையில், "இந்திய அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த மதிப்புகள் என்பது நாட்டில் நிலவும் பன்முகத்தன்மை, பன்மைத்துவம், மதச்சார்பின்மை, சட்டத்தின் முன் சமத்துவம், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை தான். ஆனால் பாஜகவின் இந்துத்துவா எதேச்சதிகார ஆட்சியில் இவை தகர்க்கப்பட்டது.
அயோத்தியில் ராமர் சிலை திறப்பு விழாவை காங்கிரஸ் புறக்கணித்ததாக சில நாட்களுக்கு முன்பு பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியது, நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் ஆகும்" என்றார்.












Click it and Unblock the Notifications