சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாற்றங்களை நம்மிடமிருந்து தொடங்குவோம்.. பரமக்குடி விழாவில் பேனருக்கு தடை.. கமல் அதிரடி!

பரமக்குடியில் கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவில் பேனர் வைக்க கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பரமக்குடியில் கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவில் பேனர் வைக்க கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற பெண் இரண்டு மாதம் முன் விபத்தில் பலியானார். சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் பைக்கில் செல்லும் போது மேலே விழுந்து சுபஸ்ரீ விபத்திற்கு உள்ளானார். கட் அவுட் முகத்தில் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ, லாரி டயரில் சிக்கி பலியானார்.

No banner for Paramakudi function says Kamal After Subhasri Banner Death

இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல்வாதிகள் சினிமா நடிகர்கள் பலர் தங்களுக்கு இனிமேல் பேனர் வைக்க கூடாது என்று கூறினார்கள். சென்னை ஹைகோர்ட்டும் சென்னையில் பேனர் வைக்க தடை விதித்தது.

இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனக்கு பரமக்குடியில் பேனர் வைக்க கூடாது என்று கூறியுள்ளார். பரமக்குடியில் கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழா நடைபெறகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்.


இந்த விழாவில் ஒரு பேனர் மற்றும் கொடிகள் கூட வைக்க கூடாது. விழா இயல்பாக நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் பேனர், கொடிகள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன், என்று கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார் .

கமிஷ்னர் சரியில்லை.. கிரண்பேடி மாதிரி ஒருவர் வேண்டும்.. டெல்லி போலீசார் பரபர கோரிக்கை!கமிஷ்னர் சரியில்லை.. கிரண்பேடி மாதிரி ஒருவர் வேண்டும்.. டெல்லி போலீசார் பரபர கோரிக்கை!

அதோடு அரசியல் ஆட்சி முறையில் மக்கள் நீதி மய்யம் கொண்டு வரவுள்ள மாற்றங்களை நம்மிடமிருந்து தொடங்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
No banner for Paramakudi function says Kamal Haasan After Subhasri Banner Death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X