TVK Vijay: தேர்தலுக்கு பிறகு எங்களுக்கு விஜய் கூட்டணி தேவையில்லை- Confident-ஆக இருக்கும் பாஜக!
சென்னை: தமிழகத்தில் எங்கள் கூட்டணி மிக வலுவாக உள்ளது. தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இல்லை. விஜய்யுடன் கூட்டணி தேவையில்லை என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஒரு சேனலுக்கு அளித்த நேர்காணலில் அரசியலில் புதியவர்கள் உடனடியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இந்தத் தேர்தலில் திமுகவின் ஊழல், சனாதனத்துக்கு எதிரான நிலைப்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக நபின் சுட்டிக்காட்டினார்.

மேலும், "தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி மிக வலுவாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இல்லை. விஜயுடன் கூட்டணி தேவையில்லை," என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். என்.டி.ஏ. கூட்டணி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறை (Delimitation) குறித்து வினவிய நபின், அதை உருவாக்கியவர்கள் தங்கள் சட்டத்தை நம்பவில்லையா எனவும், அவரவர் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மறுவரையறையில் குறை இருந்ததா எனவும் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், ராகுல் காந்தியின் நடத்தை, மொழி முதிர்ச்சியற்றதாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வாஜ்பாய் போன்ற மூத்த தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்ததை நினைவூட்டினார்.
பெண் வாக்காளர் ஆதரவு குறித்துத் தெரிவித்த நபின், நாடு முழுவதும் உள்ள பெண்கள் பாஜக பக்கம் இருப்பதாகவும், மேற்கு வங்கத்திலும் இந்த நிலை மாறப்போவதில்லை என்றும் கூறினார். அங்கு பெண்களுக்கு மரியாதையின்மை நிலவுவதால், அச்சத்தில் வாழ்கிறார்கள் எனவும், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் இதுவரை அதாவது பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 62.97% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, புதிய நீதி கட்சி, ஐஜேகே, தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறார்கள்.
அது போல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
-
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம்












Click it and Unblock the Notifications