விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை..நிர்வாகத்திறமை இல்லாத திமுக அரசு - இபிஎஸ் குற்றச்சாட்டு
தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்த வித நிவாரணமும் அறிவிக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: தென்மேற்குப் பருவமழையின் போது விவசாயிகள் நடவு செய்த நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டார்கள் என்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எதுவும் வழங்கவில்லை என்றும் சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட் பற்றி எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதிமுக ஆட்சி காலத்தில் உரமானியம் நடவு மானியம் அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு முதியோர் ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, விபத்து உதவித்தொகை வழங்கிய அரசு அதிமுக அரசு என்று தெரிவித்தார்.

விவசாயிகள் பாதிப்பு
தென்மேற்குப் பருவமழையின் பொழுது விவசாயிகள் நடவு செய்த நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டார்கள்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எதுவும் வழங்கவில்லை. நாங்கள் அறிக்கை விட்டும் விவசாயிகளைக் கண்டு கொள்ளவில்லை. விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். வேளாண் பட்ஜெட்டில் வடகிழக்குப்பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வருவதாக கூறியுள்ளனர்.

பாதிப்புக்கு நிவாரணம்
புயல் வெள்ளத்தால் எப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் நிவாரணம் அளித்த ஒரே அரசு அதிமுக அரசு. அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து உரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தி விடுவோம். மத்திய அரசிடம் இருந்து நிதியை எதிர்பாராமல் மாநில அரசே கொள்முதல் செய்து பணத்தை செலுத்து விடுவோம். விவசாயிகளின் பிரச்சினை உடனுக்குடன் தீர்க்கப்பட்டுவிடும்.

நிர்வாகத்திறமை இல்லை
திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்த உடன் நெல்லை கொள்முதல் செய்வதில்லை. திறந்த வெளியில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருப்பதால் மழையில் முளைத்து பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். அதே போல கொள்முதல் செய்த நெல்மணிகளை பாதுகாக்காமல் திறந்த வெளியில் வைத்திருப்பதால் அவையும் மழையில் நனைந்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு மொத்தத்தில் சரியாக நிர்வாகத்திறமை இல்லாத அரசு என்பது இதன் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது.
Recommended Video

நகைக்கடன் தள்ளுபடி
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் 12038 கோடியை தள்ளுபடி செய்த அரசு அதிமுக அரசு. அதே நேரத்தில் 5 சவரன் நகை தள்ளுபடி விஷயத்தில் 35 லட்சம் பேர் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போயிருக்கின்றனர். தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications