“சபாஷ்”.. கடந்த முறை எழுந்த எதிர்ப்பு! திருத்திக்கொண்ட “பிக் பாஸ்” - புரோமோவ கவனிச்சீங்களா?
சென்னை: விஜய் டிவியில் 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் இன்று தொடங்கப்படும் நிலையில், கடந்த சீசனில் ஒளிபரப்பாகி வந்த ரம்மி விளம்பரம் இம்முறை இடம்பெறவில்லை.
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. இதில், ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் பணிபுரிந்த பலர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.
குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா, கேபிஒய் சாம்பியன்ஸ், பிக்பாஸ், பிபி ஜோடிகள் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்து வருகின்றன.

பிக் பாஸ்
இதில் குறிப்பாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆண்டுக்கு 106 நாட்கள் ஒளிபரப்பாகி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் ராஜு வெற்றிபெற்றார்.

பிக் பாஸ் அல்டிமேட்
இதனை தொடர்ந்து டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் 24 மணி நேரம் ஒளிபரப்பாகும் தனி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதனை தொடக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அவருக்கு சினிமா ஷூட்டிங்குகள் இருந்த காரணத்தால் பின்னர் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வந்தார். அதில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

பிக் பாஸ் 6
இந்த நிலையில் பிக் பாஸ் 6 வது சீசன் எப்போது ஒளிபரப்பாகும், அதில் கமல்ஹாசன் கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி பிக் பாஸ் 6 தொடர்பான புரோமா முன்னறிவிப்பு காட்சியை விஜய் டிவி வெளியிட்டது. அதில் கடந்த பிக் பாஸ் சீசன் வெற்றியாளர் ராஜு இடம்பெற்றார்.

முதல்முறையாக மக்கள்
அதன் இறுதியில், "பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களாகிய நீங்கள் பங்கேற்க ஒரு அறிய வாய்ப்பு! உடனே vijay.startv.com லாகின் செய்து பிக் பாஸில கலந்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து பதவியேற்றம் செய்யுங்கள். கடைசி நாள் 04/09/2022 நள்ளிரவுக்குள்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இன்று தொடங்குகிறது
இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக்பாஸ் சீசன் 6 இன்று தொடங்குகிறது. இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் புரோமோ என பல புரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. அதில், பெயிண்ட், மிக்சி, எலெக்டிரானிக் கடை, காபி, பைப், கார் விளம்பரங்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கின்றன.

ரம்மி விளம்பரம்
கடந்த பிக் பாஸ் 5 வது சீசனில் டைடிலுக்கு கீழேயே ஆன்லைண்ட் ரம்மி நிறுவனத்தின் விளம்பரம் இடம்பெற்றது சர்ச்சைக்கு உள்ளானது. ஆன்லைன் ரம்மியால் தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அரசியல்வாதியான கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ரம்மி விளம்பரமா என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்தது. ஆனால், இதற்கு முன்பாக கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட புரோமோவிலேயே ரம்மி விளம்பரம் இடம்பெறவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications