சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொதுக்குழு, தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் செல்லாது... தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: ஜூன் 23ல் கூட்டப்பட்ட பொதுக்குழு மற்றும் இன்று நடந்த தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என்பன உள்ளிட்ட விபரங்களோடு தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர் செல்வம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

Recommended Video

    Rajan Chellappa ஆவேசம்! OPS இப்படி செய்யலாமா? *Politics

    தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சியின் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தாக்கல் செய்யப்பட வேண்டும்.

    இது வழக்கமான நடைமுறை என்றாலும் கூட தற்போது உள்கட்சி பிரச்சனையால் இது அதிக கவனம் பெற்றுள்ளது. இதில் தன்னை ஓ பன்னீர் செல்வம் தன்னை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கூறியுள்ளார். இந்த அறிக்கையில் உள்ள முக்கிய விபரங்கள் வருமாறு:

    மதஉணர்வை தூண்டியதாக கூறி பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது! டெல்லி போலீஸ் நடவடிக்கை மதஉணர்வை தூண்டியதாக கூறி பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது! டெல்லி போலீஸ் நடவடிக்கை

    5 ஆண்டு பதவிக்காலம்

    5 ஆண்டு பதவிக்காலம்

    12.09.2017 ல் கொண்டு வரப்பட்ட கட்சியின் திருத்த சட்டப்படி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது 5 ஆண்டுகளாகும். இந்த விதியின்படி தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரை நீக்கவோ, விதிகளில் திருத்தம் செய்யவோ கட்சி தொண்டர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது.

    பொதுக்குழு செல்லாது

    பொதுக்குழு செல்லாது

    இந்நிலையில் கட்சி அலுவலக மேலாளர் மகாலிங்கம் வழியாக ஜூன் 22ல் பொதுக்குழு தீர்மானங்கள் எனக்கு வந்தது. இதில் 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை அங்கீகரிக்காததால் ஜூன் 23ல் நடந்த பொதுக்குழு செல்லாது. மேலும் அவைத்தலைவர் தேர்வும் செல்லாது. பொருளாளர் என்ற முறையில் கணக்கு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்

    தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்

    மேலும் 26ம் தேதி இரவில் கட்சி தலைமையகம் பெயரில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது தொடர்பாக அறிக்கை வெளியானது. இதில் எந்த கையெழுத்து இடம்பெறவில்லை. தலைமை அலுவலக செயலாளர் பெயரில் வெளியாகி இருந்தது. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அனுமதியில்லை. மேலும் ஜூலை 11ம் தேதிக்கான பொதுக்குழு அறிவிப்பும் உரிய முறையில் கூட்டப்படவில்லை '' என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    உச்சநீதிமன்றத்தில் மனு

    உச்சநீதிமன்றத்தில் மனு

    முன்னதாக அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இன்று கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    English summary
    O Panneer Selvam has submitted a report to the Election Commission with details including the general council meeting held on June 23 and the meeting of the executive councils held today is invalid.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X