எதிர்பாராத ட்விஸ்ட்! ராயப்பேட்டையில் மாஸ்காட்டிய ஓபிஎஸ்! கட்சி அலுவலகத்தை கைப்பற்றிய ஆதரவாளர்கள்?
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் நடைபெற்று வரும் நிலையில் எதிர்பாராத திருப்பமாக கட்சித் தொண்டர்களுடன் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றியுள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் பொருளாளருமான ஓ பன்னீர்செல்வம்.
Recommended Video
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பல அதிரடி திருப்பங்களுடன் சென்னை வானகரத்தில் அதிமுகவின் இந்த ஆண்டில் இரண்டாவது பொதுக் குழு கூட்டம் தொடங்கவுள்ளது.
நீதிமன்ற தீர்ப்புகள் சாதகமாக அமையாத நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் இறுதியாக உயர்நீதிமன்றத்தை நம்பி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

ஓ.பன்னீர்செல்வம்
இந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரத்திற்கு தனது பிரச்சார வாகனத்தில் எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டு சென்றார். இதையடுத்து வழிநெடுகிலும் அவர்களுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதே நேரத்தில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என எதிர்பார்த்த நிலையில் அதை உறுதிப்படுத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை அலுவலகம் நோக்கி புறப்பட்டார். இங்கு தான் பிரச்சனையே ஆரம்பித்தது.

கடும் மோதல்
ஓபிஎஸ் கட்சி தலைமை அலுவலகம் வருகிறார் என்பதை கேள்விப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களும் அங்கு சரிசமமாக குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவிய நிலையில் கற்கள் கட்டைகள் உள்ளிட்டவற்றால் மாறி மாறி இருதரப்பு ஆதரவாளர்களும் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் பலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதால் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர் ஒருவருக்கு மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது.

கட்சி அலுவலகம் கைப்பற்றல்
இருந்தும் மனம் தளராத ஓ.பன்னீர்செல்வம் ரத்தக்கறை படிந்த காருடன் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தார் . முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் வருவதை ஒட்டி அதிமுகவின் வெளிப்புற கேட்டை பூட்டப்பட்டு இருந்த நிலையில் அவற்றை உடைத்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவையும் அடித்து உடைத்தனர். இதையடுத்து புகழேந்தி உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் சென்றார் ஓ.பன்னீர்செல்வம்.

இபிஎஸ் படம் கிழிப்பு
அடுத்ததாக கலவரங்களுக்கு மத்தியிலும் ஜெயலலிதா எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஜெயலலிதா நின்ற பால்கனியில் உற்சாகமாக தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அதே நேரத்தில் ஆத்திரம் அடங்காத ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்களை கிழித்து அதிமுக அலுவலகத்திற்கு உள்ளே வைத்து தீவைத்துக் கொளுத்தினர்.
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications