சாய்னா நேவால் குறித்து ஆபாச பதிவு.. சென்னை போலீசில் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்.. முழு விவரம்
சென்னை: பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாசமாக கருத்து பதிவிட்டது தொடர்பாக நடிகர் சித்தார்த் போலீசில் மன்னிப்பு கேட்டுள்ளார். விசாரணையின்போது அவர் மன்னிப்பு கேட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக ஆக்டிவில் இருந்து வருகிறார். அரசியல் ரீதியான கருத்துகளையும் அவ்வப்போது துணிச்சலாக வெளியிட்டு வருகிறார். ஒரு சில ட்வீட்கள் தொடர்பாக அவர் சர்ச்சையில் சிக்கியதும் உண்டு.

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்
கடந்த ஆண்டு இறுதியில் பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்ட விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறி இருந்தார். ''எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று அவர் கூறி இருந்தார்.

நடிகர் சித்தார்த் ஆபாசமான கருத்து
இதனை தொடர்ந்து நடிகர் சித்தார்த் ஆபாசமான மோசமான வார்த்தையால் சாய்னா நேவாலுக்கு பதில் கூறி இருந்தார். சித்தார்த் பெண்களை அவமதிப்பதாக அவருக்கு கடும் கண்டனம் எழுந்தது.
தேசிய மகளிர் ஆணையமும் கடுமையாக கண்டித்து சித்தார்த்துக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. பல்வேறு அரசியல், சினிமா பிரபலங்களும் சித்தார்த்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த் '' ஆபாசமாக பதிவு செய்ய வேண்டும் என்கிற எந்தவொரு உள்நோக்கமும் எனக்கு இல்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை'' என்று விளக்கம் அளித்தார்.

போலீசில் புகார்
இதன்பின்னர் இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் நடிகர் சித்தார்த்தை மன்னித்து விட்டதாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் டுவிட்டரில் கூறி இருந்தார். நடிகர் சித்தார்த் மீது தெலங்கானா மாநிலம் ஐதராபாத் போலீசாரும் ஐபிசி் பிரிவு 509 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சென்னை காவல் துறையிலும் சித்தார்த் மீது கிரிமினல் வழக்கு அல்ல. அவதூறு வழக்கு உள்ளது என்று இரண்டு புகார்கள் கொடுக்கப்பட்டன.
Recommended Video

மன்னிப்பு கேட்டார்
இதன்பின்னர் சென்னை போலீசார் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பினார்கள். மேலும், அவரிடம் சென்னை போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சாய்னா நேவால் குறித்து ஆபாசமாக கருத்து பதிவிட்டது தொடர்பாக சித்தார்த் மன்னிப்பு கேட்டதாக சென்னை காவல்துறை கூறியுள்ளது. காணொளி மூலம் நடந்த விசாரணையில் தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்டு கொண்டதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications