சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓமிக்ரான் பற்றி பொதுமக்கள் பயப்பட வேண்டாம்...29 பேர் குணமடைந்தனர் - மா.சுப்ரமணியன்

ஓமிக்ரான் வைரஸ் பரவலை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரானா இரண்டாம் அலையின் போது எவ்வளவு துரிதமாக செயல்பட்டு நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டதோ அதே போல நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். வைரஸ் பரவல் அதிகரித்தாலும் மக்கள் பயமோ, பதற்றமோ அடையத் தேவையில்லை என்றும் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், சென்னை மாநாகராட்சியில் அதிகபட்ச படுக்கைகள் நிறுவப்பட்டுள்ளன. டிரிபிள் சி என்ற வகையில் தற்காலிக கொரோனா கேர் சென்டர்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

 Omicron : Dont be afraid of the public - Awareness is needed - Ma Subramaniam

இரண்டாம் அலையின் போது எவ்வளவு துரிதமாக செயல்பட்டு நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டதோ அதே போல நடவடிக்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை டிரேட் சென்டரில் ஆக்சிஜன் வசதியோடு கூடிய படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது அது விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

மாணவர்களுக்கு 33லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். ஜனவரி 3ஆம் தேதி சென்னை போரூர் பள்ளிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்க உள்ளார். மாநிலம் முழுவதும் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். ஒரு மாதத்திற்குள் 15 முதல் 18 வயது உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்து விடும்.

ஜனவரி 10ஆம் தேதி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று கூறிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் தடுப்பூசி செலுத்திய முன்களப்பணியாளர்கள், மூத்த குடிமக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என்று கூறினார்.

தமிழகத்தில் 45 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. 29 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அனைவருக்கும் சாதாரண அறிகுறி மட்டுமே உள்ளது. ஆக்சிஜன் தேவைப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். எஸ் ஜீன் மாதிரி தெரியவந்த 129 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடிவேலு, இயக்குநர் சுராஜ் ஆகியோருக்கு எஸ் ஜீன் அறிகுறி தென்பட்டதாகவும் கூறினார்.

Recommended Video

    ஓமிக்ரான் அச்சம்.. பொதுஇடங்களில் நியூ இயர் கொண்டாட்டம் வேண்டாம்… அமைச்சர் வேண்டுகோள்!

    தமிழகத்தைப் பொருத்தவரை யாரும் பயப்பட வேண்டாம். பதற்றப்பட தேவையில்லை. எல்லோரும் முகக்கவசம், அணிய வேண்டும் தடுப்பூசி செலுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது சென்னையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் முதன் முறையாக அசோக் நகரில் ஒரு பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    English summary
    Minister M. Subramaniam said that measures were being taken to ensure that bed facilities and medical facilities were provided to the patients during the second wave of Corona. Subramanian said that despite the increase in the spread of the virus, people need not fear or panic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X