ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: ஆதார் எண்ணை ரேசன் காட்டுடன் இணைக்க ஜூன் 30 கடைசி நாள்
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னை: ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி நாள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30 2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சுமார் 80 கோடி பயனாளர்கள் உள்ளனர்.

ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை இணைப்பதால் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய முடியும். புலம்பெயர் தொழிலாளர்கள் தடையின்றி உணவு தானியங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும்.
இதன் மூலம், நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கடையிலும் ரேஷன் பெற முடியும். முன்னதாக ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்தது. தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ளது. நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், வரும் ஜூன் 30 2022க்குள் அதை செய்து முடிக்கவும்.
தேவையான ஆவணங்கள்: ஒரிஜினல் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ். ஆன்லைனில் இந்த ஆவணங்களை கொண்டு ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கலாம்.
இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் ' start now' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்பு அதில், முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்கள் கேட்கப்படும். அதை சரியாக நிரப்ப வேண்டும்.
பின்பு 'ration card benefit' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.OTP ஐ நிரப்பினால் ஆதார் - ரேஷன் கார்டு இணைக்கப்பட்டுவிடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications