குஷ்புவுக்கு ஆப்ரேஷன் சக்சஸ்! பயப்பட ஒன்றுமில்லை! விரைவில் டிஸ்சார்ஜ்! அப்போலோ மருத்துவமனை தகவல்!
சென்னை: இடுப்பு எலும்பு பகுதியில் உள்ள வால் எலும்பு மற்றும் முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்ட குஷ்புவுக்கு அப்போலோ மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.
குஷ்புவுக்கு பயப்படும் படி எதுவுமில்லை என்றும் அவர் அறுவைச் சிகிச்சைக்கு பிறகு நலமுடன் இருக்கிறார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் குஷ்பு வீடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் குஷ்புவின் உடல்நலத்தை வைத்து கிளம்பிய பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கடந்த 2 ஆண்டுகளாகவே இடுப்பு பகுதியில் அமைந்துள்ள வால் எலும்பில் (Tail bone) ஏற்படும் வலியால் மிகுந்த அவதிப்பட்டு வருகிறார். உடல் எடையை குறைத்த பின்னரும் இடுப்பு வால் எலும்பில் (Tail bone) குஷ்புவுக்கு வலி குறைந்தபாடில்லை.
இதனால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதற்கான சிகிச்சைகளை தொடங்கினார். இதனிடையே மருத்துவர்கள் அறிவுரைப்படி கடந்த அக்டோபர் மாதம் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் மைக்ரோ இன்சிஷன் முறையில் நுண்துளை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட குஷ்பு அதன் பின்னர் ஓரளவு ஆக்டிவாக இயங்கத் தொடங்கினார்.
அறுவை சிகிச்சையானது அட்வான்ஸ்டு தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்டதால் மீண்டும் எலும்பு பகுதியில் வலி உட்பட எந்த பிரச்சனையும் ஏற்படாது என நம்பினார். இதனிடையே இப்போது மீண்டும் அவருக்கு இடுப்பு எலும்பு பகுதியில் உள்ள வால் எலும்பில் வலி ஆரம்பித்திருக்கிறது.
இதையடுத்து மீண்டும் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குஷ்பு, பூரண நலம்பெறுவேன் என நம்புவதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதனிடையே இது குறித்து தகவலறிந்த அவரது அரசியல் மற்றும் சினிமா நண்பர்கள் குஷ்புவிடம் நலம் விசாரித்து வந்தனர்.
இந்தச் சூழலில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில், குஷ்புவுக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிகிச்சைகளை முடித்துக்கொண்டு ஓரிரு நாட்களில் குஷ்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாலும் கூட ஒரு மாதம் ஓய்வில் இருப்பார் எனத் தெரிகிறது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications