Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓவரா பேசுறாரே.. ஆர்.பி.உதயகுமாரை குறி வைத்த ஓபிஎஸ் டீம்.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ‘சிக்னல்’!?

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக அட்டாக் செய்து வரும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை குறி வைத்துள்ளது ஓபிஎஸ் தரப்பு.

ஓபிஎஸ் வகித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார், தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸுக்கு எதிரான முகமாக முன்னிறுத்தப்படுகிறார்.

இதனால், ஓபிஎஸ் தரப்பு அவர் மீது குறி வைத்துள்ளது. அவர் மீதான புகார்களை ஓபிஎஸ் தரப்பு கிளப்பி வருவதால், விரைவில் ரெய்டு நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் கோட்டையில் உதயகுமார்

ஓபிஎஸ் கோட்டையில் உதயகுமார்

தி.மு.க அரசின் மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து தேனியில் அ.தி.மு.க சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தனித்தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.கவினர் குவிக்கப்பட்டனர். ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டத்தில் அவரை கடுமையாக தாக்கினார் உதயகுமார்.

 கடும் தாக்குதல்

கடும் தாக்குதல்

திமுக அரசுக்கு எதிரான கண்டன ஆர்பாட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், அரசை கண்டித்துப் பேசியதைக் காட்டிலும், ஓ.பன்னீர்செல்வத்தையே கடுமையாக விமர்சித்துப் பேசினார். அ.தி.மு.க தொண்டர்களின் கோவிலாக இருக்கும் தலைமைக் கழகத்தை குண்டர்களை, ரவுடிகளை அழைத்துச் சென்று சூறையாடி இருக்கிறீர்களே! உங்கள் வீட்டை சூறையாட எவ்வளவு நேரம் ஆகும் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது எனப் பேசினார்.

ஓபிஆருக்கு சவால்

ஓபிஆருக்கு சவால்

நமக்கு ஒரே ஒரு எம்.பி கிடைத்தார் என்று சந்தோஷமாக இருந்தோம். இங்குள்ள உண்மைத் தொண்டர்களின் உழைப்பால் தான் அவர் வெற்றி பெற்றார். மக்கள் செல்வாக்கு இல்லாத ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், நான் அரசியலில் இருந்தே விலகத் தயார் என ஓபிஆருக்கு சவால் விடுத்தார் ஆர்.பி.உதயகுமார்.

Recommended Video

    டார்கெட் தேனி! ஓபிஸ் மண்ணில் களமிறங்கிய முன்னாள் சிஷ்யர்!
    அட்டாக்

    அட்டாக்

    ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஈபிஎஸ் களமிறக்கியிருக்கும் ஆர்.பி.உதயகுமார் ஓபிஎஸ்ஸை கடுமையாக தாக்கிப் பேசி வருவது பன்னீர் தரப்பினர் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நேரடியாகவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உதயகுமாருக்கு பதிலடி கொடுத்துப் பேசி வருகின்றனர். ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஆர்.பி.உதயகுமாருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

    கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

    கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

    கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ஆர்.பி.உதயகுமார் ஒரு விபத்தில் அதிமுகவிற்கு வந்து, அதன்பிறகு ஜெயலலிதாவையும், சசிகலாவையும் ஏமாற்றி டாக்டர் வெங்கடேஷ் மூலமாக பதவியை பெற்று அமைச்சரானவர். அவருக்கு ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. முதலில் இரட்டை தலைமைதான் வேண்டும் என துதி பாடியவர், அதன் பிறகு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என துதி பாட ஆரம்பித்தார்.

     அரசியலை விட்டே

    அரசியலை விட்டே

    ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவரையும் பிடித்து மாறி மாறி பேசிக்கொண்டு வருகிறார். உதயகுமாருக்கு இருப்பது வாயா அல்லது கூவமா என தெரியவில்லை. ஓபிஎஸ்சின் மகனை ராஜினாமா செய்யச் சொல்லும் உதயகுமார் திருமங்கலம் தொகுதியில் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் அங்கு நிற்க தயாரா? அவ்வாறு அங்கு நின்று அவர் ஜெயித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து வெளியேறி விடுகிறேன் எனவும் சவால் விடுத்துள்ளார்.

    லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

    லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

    மேலும், பொன்னையன் அது தனது ஆடியோ இல்லை என்று சொன்னால் மீண்டும் ஒரு ஆடியோவை வெளியிடுகிறேன். இன்று நாள் சரியில்லை, நல்ல நாளாக பார்த்து மேலும் சில ஆடியோக்களை வெளியிடுகிறேன். ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அவை நிரூபிக்கப்பட்டால் காலம் முழுவதும் அவர் சிறையில் தான் இருப்பார்" என்று கூறினார்.

    ஓபிஎஸ் தரப்பு சிக்னல்

    ஓபிஎஸ் தரப்பு சிக்னல்

    ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சிக்னல் கொடுக்கும் வகையில் பேசியுள்ளது ஓபிஎஸ் தரப்பு. ஏற்கனவே கோவை செல்வராஜ் உள்ளிட்டோரும் ஆர்.பி.உதயகுமாரின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விரைவில் ரெய்டு?

    விரைவில் ரெய்டு?

    ஓபிஎஸ் வகித்த பதவிக்கு வந்துள்ள ஆர்.பி.உதயகுமாரை, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக அட்டாக் செய்து வருகின்றனர். ஆர்.பி.உதயகுமாருக்கு எதிரான புகார்கள் ஓபிஎஸ் தரப்பினராலேயே சொல்லப்படுவதால், இது தொடர்பான ஆதாரங்களைக் கொண்டு விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டு நடத்தப்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+