சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னப்பா நடக்குது... கூட்டணியில் இருக்கும்போதே அதிமுக மாஜி எம்.எல்.ஏவை அலேக்காக தூக்கியது பாஜக!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் இன்று பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க) இணைந்ததால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மாணிக்கம். அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியது அவருக்கு ஆதரவு குரல் கொடுத்த முதல் எம்.எல்.ஏ. சோழவந்தான் மாணிக்கம்.

ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர்

ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர்

மேலும் 2017-ம் ஆண்டு சட்டசபையில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியிருந்தார். அப்போதும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே வாக்களித்தார் மாணிக்கம். அப்போது அமைச்சராக இருந்த ஆர்.பி. உதயகுமாருடன் மிகவும் உக்கிரமான மோதல் போக்கை கடைபிடித்ததோடு மிக கடுமையாகவும் விமர்சித்தார் மாணிக்கம்.

அதிமுக வழிகாட்டுதல் குழு

அதிமுக வழிகாட்டுதல் குழு

பின்னர் அதிமுக ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டது. இந்த வழிகாட்டுதல் குழுவில் ஓபிஎஸ் ஆதரவாளரான சோழவந்தான் மாணிக்கமும் இடம் பெற்றிருந்தார். சட்டசபை தேர்தலில் சோழவந்தான் தொகுதியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குறிவைத்தார். ஆனால் ஓ.பி.எஸ். போராடி சோழவந்தான் தொகுதியை மாணிக்கத்துக்கே மீண்டும் பெற்றுத் தந்தனர். சட்டசபைத் தேர்தலில் மாணிக்கம் தோல்வியைத் தழுவினார்.

தேர்தலின் போது சர்ச்சை

தேர்தலின் போது சர்ச்சை

தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகாரில் சோழவந்தான் மாணிக்கம் சிக்கியிருந்தார். இது தொடர்பான ஆடியோ பதிவு ஒன்றும் லீக் ஆகி பரபரப்பை கிளப்பியது. ஆனால் அப்போது சோழவந்தான் மாணிக்கம் இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்திருந்தார். கடந்த சில மாதங்களாக அதிமுகவில் யார் பெரியவர் என ஓபிஎஸ்- ஈபிஎஸ் மோதி வருகின்றனர்.

பாஜகவில் திடீரென ஐக்கியம்

பாஜகவில் திடீரென ஐக்கியம்

இந்த நிலையில் இன்று திடீரென மாணிக்கம், பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திருப்பூரில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மாணிக்கம் தம்மை பாஜகவில் இணைத்துக் கொண்டார். தற்போதைய நிலையில் அதிமுக கூட்டணியில்தான் பாஜகவும் இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வை தங்கள் பக்கம் பாஜக வளைத்திருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
O.Panneerselvam's Strong supporter and Ex AIADMK MLA Manickam joined BJP today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X