பண மேட்டர்.. ‘வீண் பழி’.. எம்.ஜி.ஆர் செஞ்சது ஞாபகம் இருக்கட்டும் - கொந்தளிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!
சென்னை : அன்று எம்.ஜி.ஆர் மீது திமுகவினர் சுமத்திய குற்றச்சாட்டை இன்று எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மீது சுமத்தியுள்ளார் என நினைவுகூர்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.
திமுக பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆரை கட்சியை விட்டுத் தூக்கியதால் தான், அவர் தனிக்கட்சி தொடங்கி, தனது இறுதிக்காலம் வரை திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் தடுத்தார்.
இன்று அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் மீது, கட்சிக் கணக்கில் கையாடல் செய்துவிட்டதாக அபாண்டமாக குற்றம்சாட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
எம்.ஜி.ஆரால் திமுகவுக்கு ஏற்பட்ட நிலைமை, பன்னீர்செல்வத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர்களான அதிமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக தலைமைக் கழகம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே ஜூலை 11ஆம் தேதி ஏற்பட்ட கடும் மோதலைத் தொடர்ந்து வருவாய் துறையினர் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நோட்டீஸ்
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்று வாதிடப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய்த்துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஓபிஎஸ் கையாடல்
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நாளை நடைபெறுகிறது. இந்த வழக்கில் இபிஎஸ் தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், 'ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது அதிமுக அலுவலகத்திற்கு உரிமை கூற முடியாது. பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளதால் அலுவலக சாவியை அவரிடம் ஒப்படைக்க கூடாது. அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வன்முறைகள் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்தியுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குமுறல்
நாளை இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் சூழலில், பொருளாளராக இருந்த ஓபிஎஸ் பண விவகாரங்களில் கையாடல் செய்துள்ளதாக ஈபிஎஸ் தரப்பு தங்கள் பதில் மனுவில் தெரிவித்துள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு கடுமையான ஷாக்கை கொடுத்துள்ளது. மேலும், இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.ஜி.ஆர் மீது சுமத்தப்பட்டது போல ஓபிஎஸ் மீது வீண் பழி சுமத்தப்பட்டிருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குமுறி வருகின்றனர்.

எம்.ஜி.ஆருக்கு நடந்தது என்ன
அதிமுகவை தொடங்குவதற்கு முன்பு திமுகவில் பொருளாளராகப் பதவி வகித்தவர் எம்.ஜி.ஆர். 1972ல் ஒரு திமுக கூட்டத்தில், 'ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி திமுகவினர் சொத்து சேர்த்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தர, கட்சியின் தலைவர்கள் தங்கள் சொத்துக் கணக்கை தரவேண்டும் எனப் பேசினார் அன்றைய திமுக பொருளாளர் எம்.ஜி.ஆர். இதனால் கட்சிக்குள் ஏற்பட்ட கொந்தளிப்பைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவித்ததாக கூறி, கட்சியிலிருந்து அவரை நீக்கி அறிவித்தது திமுக தலைமை.

கட்சி கணக்கு
கட்சிக் கணக்கை கேட்டதால் எம்.ஜி.ஆர் கட்டம் கட்டப்பட்டதாக அதிமுக தலைவர்கள் விமர்சிப்பார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர், கட்சியின் கணக்கை காட்ட வேண்டியதே பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் தானே.. அவர் யாரிடம் கணக்கு கேட்பார்? அவர் கணக்கில் கையாடல் செய்ததால் வெளியேற்றப்பட்டார் என திமுகவினர் மேடையில் பேசும் சம்பவங்களும் நடந்துள்ளன.

எம்.ஜி.ஆரை போலவே
இன்றும் அதேபோல, அதிமுக பொருளாளராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பண விவகாரங்களில் கையாடல் செய்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஓபிஎஸ்ஸை கட்சியில் விட்டு நீக்கிவிட்டதாகவும் அறிவித்துள்ளது ஈபிஎஸ் டீம்.

அபாண்ட பழி
எம்.ஜி.ஆருக்கு அன்று திமுகவில் நேர்ந்தது இப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேர்ந்திருக்கிறது என நினைவுகூர்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். எம்.ஜி.ஆர் மீது பொய் புகார் சுமத்தி வெளியேற்றினார்கள். அன்றும், எம்.ஜி.ஆருக்கு மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மத்தியில் பெரிய ஆதரவெல்லாம் இல்லை. ஆனால், அவர் அதிமுகவைத் தொடங்கி, தனது இறுதிக்காலம் வரை முதல்வராக இருந்து மறைந்தார். ஓபிஎஸ் மீது பொய் பழி கூறும் ஈபிஎஸ்ஸுக்கு இதை நினைவு இருக்கட்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் தவெகவில் இணைப்பு! குதிரை பேர கலாச்சாரம்! எடப்பாடி கண்டனம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications