சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் நோயாளி பலி? கடலூர் மருத்துவமனையில் என்ன நடந்தது? மா.சுப்பிரமணியன் அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கருவி எடுக்கப்பட்டதால் ராஜா என்பவர் உயிரிழந்ததாக எழுந்த புகாரில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் ராஜா என்பவருக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக அவருடைய மனைவி தெரிவித்திருந்தார்.

ஆனால் நோயாளி ராஜா முகக்கவசத்தை தாமாகவே நீக்கிவிட்டு காலை உணவு சாப்பிட்டபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை

எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை

முன்னதாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திட்டக்குடி திரு.ராஜா அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்யாமல்,ஆக்சிஜன் மாஸ்க்- சிலிண்டரை அரசுமருத்துவர் ஒருவரே எடுத்துத்சென்றதனால் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பெறுவோர்க்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்திடவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் உயிர்களை காத்திட துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

உணவு சாப்பிட்ட நோயாளி

உணவு சாப்பிட்ட நோயாளி

18.05.2021 அன்று காலை நோயாளியின் ஆக்சிஜன் நுரையீரல் நிறைவின் அளவு 60 இருந்ததால் அவருக்கு HFNO முறையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. 19.05.2021 அன்று காலை ஆக்சிஜன் தேவை அதிகமானதால் C-PAP என்னும் முறைக்கு மாற்றப்பட்டார். அவ்வாறு மாற்றியதும் நோயாளியின் ஆக்சிஜன் அளவு 78% முதல் 80% வரை இருந்தது. 20.05.2021 அன்று நோயாளி ராஜா காலை உணவு சாப்பிடுவதற்காக ஆக்சிஜன் செலுத்தும் முகக் கவசத்தை தாமாகவே நீக்கிவிட்டு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். இதே நேரத்தில் தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட 40 வயதுடைய மணிகண்டன் என்ற நோயாளி 30 மட்டுமே ஆக்சிஜன் நுரையீரல் நிறைவின் அளவு இருந்த நிலையில் புதியதாக அனுமதிக்கப்பட்டதால், உடனே வளாகத்தில் இருந்த மருத்துவக் குழு சிகிச்சை அளிக்க விரைந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளை தயார் செய்து கொண்டிருந்தது.

உணவு சாப்பிட்ட நோயாளி

உணவு சாப்பிட்ட நோயாளி

18.05.2021 அன்று காலை நோயாளியின் ஆக்சிஜன் நுரையீரல் நிறைவின் அளவு 60 இருந்ததால் அவருக்கு HFNO முறையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. 19.05.2021 அன்று காலை ஆக்சிஜன் தேவை அதிகமானதால் C-PAP என்னும் முறைக்கு மாற்றப்பட்டார். அவ்வாறு மாற்றியதும் நோயாளியின் ஆக்சிஜன் அளவு 78% முதல் 80% வரை இருந்தது. 20.05.2021 அன்று நோயாளி ராஜா காலை உணவு சாப்பிடுவதற்காக ஆக்சிஜன் செலுத்தும் முகக் கவசத்தை தாமாகவே நீக்கிவிட்டு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். இதே நேரத்தில் தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட 40 வயதுடைய மணிகண்டன் என்ற நோயாளி 30 மட்டுமே ஆக்சிஜன் நுரையீரல் நிறைவின் அளவு இருந்த நிலையில் புதியதாக அனுமதிக்கப்பட்டதால், உடனே வளாகத்தில் இருந்த மருத்துவக் குழு சிகிச்சை அளிக்க விரைந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளை தயார் செய்து கொண்டிருந்தது.

புதிய நோயாளி

புதிய நோயாளி

நோயாளி மணிகண்டனுக்கும் ஆக்சிஜன் தேவைப்பட்டதால், தரைதளத்தில் இருந்த CPAP Machine Oxygen Pin பொருத்த முயற்சி செய்யப்பட்டு அது பொருந்தாமையால் நோயாளியின் உயிர் காக்கும் பொருட்டு முதல் தளத்தில் உள்ள CPAP Machine கீழ்தளத்திற்கு பொருந்தும் என்பதால் கவலைக்கிடமான இருந்த மணிகண்டன் என்ற நோயாளியை காப்பாற்றும் பொருட்டு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக தரைதளத்தில் இருந்த CPAF Machine-ஐ முதல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். நோயாளி ராஜா அருகில் இருந்த ஆகிசிஜன் பின்னை பொருத்தி தயார் நிலையில் வைத்துவிட்டு, பின்பு அவர் அருகில் இருந்த CPAP Machine நோயாளி ராஜா உணவு அருந்திகொண்டிருந்ததாலும், தற்காலிகமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததாலும் CPAP Machine-ஐ மாற்றி கீழ்தளத்தில் இருக்கும் நோயாளி மணிகண்டனை காப்பாற்றிவிடலாம் என்று மருத்துவக் குழு விரைந்து செயல்பட்டது.

மாரடைப்பு காரணம்

மாரடைப்பு காரணம்

முதல் தளத்திலிருந்து கொண்டு வந்த CPAP Machine Oxygen Pin கீழ் தளத்தில் பொருந்தியதால் நோயாளி மணிகண்டனுக்கு ஆக்சிஜன் உடனே செலுத்தப்பட்டது. பின்பு அவர் உயிர் காப்பாற்றப்பட்டது. இதேவேளையில் முதல் தளத்தில் உள்ள நோயாளி ராஜாவிற்கு CPAP Machine கண்காணிக்க மருத்துவர்கள் விரைந்தபோது அவர் தொடர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அவருக்கான மாற்றம் செய்யப்பட்ட CPAP Machine சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையிலேயேதான் இருந்தது. தொடர்ந்து உணவு அருந்தி கொண்டிருக்கும்பொழுது திடீர் என்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. பின்பு மருத்துவர்கள் இயன்ற சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நோயாளி ராஜா உயிரிழந்தார்.

விசாரணைக்கு உத்தரவு

விசாரணைக்கு உத்தரவு


இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், முதல்வர் உத்தரவின்பேரில், விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Minister Ma Subramanian has ordered the Director of Medical and Rural Welfare to conduct an inquiry and submit a report on the complaint that Raja died due to an oxygen device being taken at the Cuddalore Government Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X