சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்... 7 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு குறள் மூலம் குட்டு வைத்த ப. சிதம்பரம்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 7 ஆண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டி திருக்குறளை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்.

P Chidambara slams 7th year of Modi-led NDA government

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமது 7-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இதனை ஒட்டி ப. சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

பணவீக்க வீழ்ச்சி, தொழில்துறை வீழ்ச்சி, பணமதிப்பு வீழ்ச்சி, பங்குச் சந்தை வீழ்ச்சி என 7 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது மோடி. மேலும் வரி விதிப்புகளால் சீரழிவு, வேலைவாய்ப்பின்மை என மேலும் மேலும் பொதுமக்களை வறுமையின் பிடியில் தள்ளிவிட்டிருக்கிறது மோடியின் 7 ஆண்டுகால அரசு.

2016 பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மேலே சொன்னவைதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்புகள். பணமதிப்பிழப்புக்குப் பிந்தைய மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு முடிவுகளும் தவறான திசையில்தான் இருந்தன. தங்களுடைய கொள்கைகள், முடிவுகள், செயல் திட்டங்கள் தவறானவை என்பதை ஒப்புக் கொள்ள, ஏற்க மறுக்கிறது மத்திய அரசு.

பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் மோடி பிடிவாதம் பிடித்து கொண்டே இருக்கிறார். இதனால் 488-வது திருக்குறளை மோடிக்கு நினைவுபடுத்த வேண்டி உள்ளது.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

(கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்- மு.வ. உரை)

இவ்வாறு ப. சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

English summary
Senior Congress leader P Chidambaram tweets that What a way to end the 7th year of the Modi-led NDA government : surging inflation, falling industrial output, declining rupee and plunging stock market! Add crushing taxes, growing unemployment and more people pushed into poverty and debt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X