மேகதாது.. மோடியை சந்திக்கும் தமிழக குழு.. கே.எஸ்.அழகிரி கொடுத்த லிஸ்டில் ப.சிதம்பரம் மிஸ்சிங் ஏன்?
சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கச் சென்ற தமிழக குழுவில் காங்கிரஸ் சார்பில், ப.சிதம்பரம் இடம் பெறாதது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் குழு இன்று பிரதமரை சந்திக்கிறது.
திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரதமரை சந்திக்கும் இந்த குழுவில், ஒவ்வொரு கட்சிகளின் சார்பில் அக்கட்சிகளின் மூத்த தலைவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

காங்கிரஸ் சார்பில் கோபண்ணா
அதேநேரம், காங்கிரஸ் தரப்பில் கோபண்ணாவை இணைத்திருக்கின்றனர். கோபண்ணா பெயரை திமுகவிடம் கே.எஸ். அழகிரிதான் பரிந்துரைத்துள்ளார். இந்த விவகாரம் காங்கிரஸ் தலைவர்களை அதிருப்தியடைய வைக்க, அழகிரியை தொடர்புகொண்டு காங்கிரஸ் தமிழக எம்.பி.க்கள் செம காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ப.சிதம்பரம் பெயர் இல்லை
ஒவ்வொரு கட்சியிலிருந்தும் முக்கிய தலைவர்கள், இந்த குழுவில் இடம் பெறும்போது கே.எஸ். அழகிரி இந்த குழுவில் சென்றிருக்கலாம். அல்லது அவருக்கு விருப்பமில்லையெனில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை அனுப்பியிருக்கலாம். அல்லது பிரதமரை சந்திக்கும் நிகழ்வு என்பதால் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை இணைத்திருக்கலாம். இதை எதையும் செய்யாமல் கோபண்ணாவை இணைக்க வேண்டிய அவசியம் என்ன ? இந்த பின்னணியிலேயே அழகிரியிடம் செம கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர் எம்.பி.க்கள்!

இரவு வரை குழப்பம்
இந்த நிலையில், கோபண்ணாவுடன் காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமாரை குழுவில் இணைக்க திமுகவிடம் சொல்லியுள்ளார் அழகிரி. அப்பவும் சிதம்பரத்தை சிபாரிசு செய்யவில்லை. இந்த நிலையில், பிரதமரை சந்திக்க செல்லும் தமிழக குழுவில் காங்கிரஸ் தரப்பில் கோபண்ணா செல்வாரா ? அல்லது காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் செல்வாரா? அல்லது இருவரும் செல்கிறார்களா ? என்ற குழப்பம் நேற்று இரவு முதல் காங்கிரசில் எதிரொலித்தபடி இருந்தது.

முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்
இந்த குழுவில் சிதம்பரம் இருந்திருக்க வேண்டும் என்றுதான் சிதம்பரத்திற்கு எதிரான கோஷ்டி தலைவர்களே சொல்கின்றனர். காரணம், பிரதமரிடம் துரைமுருகன், வைகோ, சிதம்பரம் ஆகிய தலைவர்கள் பேசும் போது அதற்கு ஒரு வலிமை இருக்கும். பிரதமரும் காது கொடுத்து கேட்பார் என்கிறார்கள்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications