"மாட்டிறைச்சி".. கலெக்டர் சார், பீப் பிரியாணியை ஏன் தடை பண்ணீங்க.. கொந்தளிக்கும் பா.ரஞ்சித் அமைப்பு

ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் மாட்டுக்கறி தடைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்பூரில் #பீப்_பிரியாணியை மட்டும் தடை செய்ய வேண்டும் என்று அதிகாரம் யார் கொடுத்தது " என்று ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கேள்வி எழுப்பி உள்ளது.

ஆம்பூர் பகுதியில் முதல்முறையாக இன்று முதல் 13, 14. 15 உள்ளிட்ட 3 நாட்கள் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழா, கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவின் பேரில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

புவிசார் குறியீடு பெறுவதற்காக 3 நாட்கள் நடத்தப்படும் பிரியாணி திருவிழா முதல் முறையாக நடத்துவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டன.

 மாட்டுக்கறி

மாட்டுக்கறி

ஆனால் இந்த திருவிழாவில் அதிக அளவில் விரும்பி உண்ணக்கூடிய மாட்டு இறைச்சி பிரியாணி இல்லாமல் திருவிழ நடைபெற வேண்டுமென்று கலெக்டர் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டம் தெரிவித்தனர்.. குறிப்பாக, பீப் பிரியாணிக்கு அனுமதி வழங்கவில்லையென்றால் பிரியாணி இலவசமாக தருவோம் என்று விசிக, எஸ்டிபிஐ, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவிக்கவும் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவிழா

திருவிழா

இதனிடையே, பிரியாணி திருவிழா நடைபெறுவது போல, சைவ உணவு திருவிழா நடத்தப்பட வேண்டுமென இந்து முன்னணி கட்சியினர் கலெக்டரிடம் மனு தந்தனர்.. இப்படி 2 தரப்பிலும் விவகாரம் வெடித்து கிளம்பியது.. இன்றைய தினம் நடைபெற இருந்த பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியானது.. ஆம்பூர் வர்த்தக மையத்தில் 13,14,15 மூன்று நாட்கள் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழாவை கனமழை காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக மாவட்ட கலெக்டரால் உத்தரவிடப்பட்டது.

 பீப் பிரியாணி

பீப் பிரியாணி

இப்படி ஆம்பூரில் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருப்பதை விசிக, இஸ்லாமிய அமைப்புகள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.. அந்த வகையில், டைரக்டர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கடுமையாக கண்டித்துள்ளது... இதுகுறித்து அந்த மையத்தின் ட்விட்டர் பக்கத்தில், "திருப்பத்தூர், ஆம்பூர் பகுதியில் பிரியாணி திருவிழா நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடந்துள்ளது.

 பீப் பிரியாணிக்கு தடையா?

பீப் பிரியாணிக்கு தடையா?

பீப் பிரியாணியை மட்டும் தடை செய்து மீதமுள்ள 50-க்கும் மேற்பட்ட பிரியாணி கடை அமைக்கப்படும் என்று கூறியது மிகவும் கண்டனத்துக்குரியது. ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் #பீப்_பிரியாணி மட்டும் வேண்டாம் என்று ஆட்சியர் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிப்போம்! #பீப்_பிரியாணியை மட்டும் தடை செய்ய வேண்டும் என்று அதிகாரம் யார் கொடுத்தது.. அரசு இப்போக்கை தடுக்க வேண்டும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+