தமிழக பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் தேவை.. மக்கள் எதிர்பார்ப்பு என்ன? நமது வாசகர்கள் கருத்துக்கள்
சென்னை: தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட், சட்டசபையில் ஆகஸ்ட் 13ம் தேதி வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால், தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. காகிதமற்ற பயன்பாட்டை உருவாக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதேபோல தமிழக வரலாற்றில் முதல் முறையாக, வேளாண் துறைக்கான தனி பட்ஜெட், 14ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
இரு பட்ஜெட் மீதான விவாதங்களும் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கி 19ம் தேதி நிறைவடைய உள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி முதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது.
இந்த நிலையில், ஒன் இந்தியா தமிழ் வாசகர்களிடம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் வாயிலாக, பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்பை கேட்டிருந்தோம். நமது வாசகர்கள் அளித்த கருத்துக்கள் இதோ உங்களுக்காக:
பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்களை முதலில் பார்க்கலாம்:

ஓய்வு பெறும் வயது
Anbarasan Muthaiah: ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக்க வேண்டும். Vimal Vimal : உண்மையாக வெளிப்படைத் தன்மையோடு நாட்டு மக்களுக்கு எல்லாவிதத்திலும் முடிந்த அளவுக்கு சிறிதளவு உதவி செய்தாலே அது வெற்றிதான். பாஜகவும் அதிமுகவும் செய்யத் தவறியதை திமுக கண்டிப்பாக செய்யும் மக்கள் நாங்கள் வரவேற்போம் மக்களின் ஆட்சி திமுக ஆட்சி

டீ, வடை பாக்கி, நஷ்டம்
Babu Sekar: நாளைய பட்ஜெட் தாக்கலின் போது சட்டசபையில் விவாதத்தின்போது டீ, வடை பாக்கி ஒரு நாளைக்கு எவ்வளவு நஷ்டம் என்று தாக்கல் செய்ய போகிறார்கள்.

இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும்
Hussainasi Hnj: முதலில் இலவசங்களை அனைத்தும் ரத்து செய்ய வேண்டும், ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை தவிர்த்திடவும், மிடில்கிளாஸ் வாழ்க்கையை மேம்படுத்தும், இருக்கிறவனை கூடுதலாக முன்னேற்றுவதை விட்டுவிட்டு, இல்லாதவனை முன்னேற்றி விட வேண்டும். தமிழ்நாட்டு முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும்.

வரியை கூட்டுவார்கள்
Vimal Santhosh: வீட்டு வரி, தண்ணி வரி, குப்பை வரி உயர்வு... விவசாய, நகை கடன் ரத்து செய்ய தாமதம்... இப்படித்தான் அறிவிப்புகள் இருக்கும்.

மனுக்களுக்கு தீர்வு
இவ்வாறு பேஸ்புக்கில் வாசகர்கள் கருத்து சொன்ன நிலையில், ட்விட்டரில் @RKSP1979 என்ற நெட்டிசன், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மூலம் பெறப்பட்ட மனுக்கள் தீர்வு காண வேண்டும்" என்பதை தனது கோரிக்கையாக முன் வைத்துள்ளார். தொடர்ந்து கருத்துக்கள் பதிவாகிய வண்ணம் உள்ளன.

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்ததை, எடப்பாடி பழனிச்சாமி அரசு 60ஆக உயர்த்தியிருந்தது. அதை குறைக்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் இதை பட்ஜெட்டில் அறிவிக்க தேவையில்லை. முதல்வர் 110வது விதியின் கீழ் அறிவிக்கலாம் என்பது, குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அரசு ஊழியர்களுக்கு பெரிய ட்விஸ்ட்.. இடமாற்றம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications